எவிக்ட் ஆன சோம், ரம்யாவுக்கு கொடுத்த ஆச்சரியமான கிஃப்ட்!

  • IndiaGlitz, [Sunday,January 17 2021]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே இன்று நடைபெற்று வரும் நிலையில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற ஐவரில் ஒருவர், சீசன் 3 வின்னர் முகினுடன் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று கமல்ஹாசன் கூறுகிறார்.

இதனையடுத்து பிக்பாஸ் வீட்டின் உள்ளே சென்ற முகின் மூன்று விதமான டாஸ்க் வைக்க அதில் மூன்றாவது டாஸ்க்கில் சோம் வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சோம், அனைவரிடமும் விடை பெற்று கொண்டு வெளியேற தயாரானார்.

அப்போது திடீரென ஞாபகம் வந்து சோம் வீட்டின் உள்ளே சென்று சாக்லேட் கவரை எடுத்து வந்து அதனை ரம்யாவுக்கு கிஃப்ட்டாக கொடுத்தார். ரம்யா முன்னொரு நாள் கொடுத்த இந்த சாக்லேட்டை அவர் பல நாட்கள் பத்திரமாக வைத்திருந்தார் என்பதும், இதனையடுத்து இன்று ஞாபகமாக அந்த சாக்லேட் கவரை ரம்யாவிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

இதனையடுத்து சோம் வெளியே சென்றவுடன் இதுவரை எத்தனையோ கிப்ட் எனக்கு வந்திருக்கின்றது. இதுபோன்ற ஒரு அழகான கிப்ட் எனக்கு கிடைத்ததில்லை என்று ரம்யா கூறுகிறார். இந்த சாக்லேட்டை பல நாட்கள் சோம் பத்திரமாக வைத்திருந்ததாக ஆரி கூற, இதனை சாக்லேட்டுடன் கொடுத்திருந்தால் கூட இவ்வளவு மதிப்பு இருந்திருக்காது. அந்த கவரை பத்திரமாக வைத்திருந்து கொடுத்தது தான் மிகப்பெரிய விஷயம் என்று பாலாஜி கூறுகிறார். மேலும் இந்த சாக்லேட்டால் தான் ‘பாட்டி சொல்லை தட்டாதே’ டாஸ்க்கில் சோம் பிடிபட்டார் என்பதையும் அவர் ஞாபகப்படுத்தினார். மொத்தத்தில் ரம்யாவுக்கு ஒரு வித்தியாசமான ஆச்சரியமான கிஃப்ட்டை கொடுத்து சென்றுள்ளார் சோம் என அனைவரும் அவரை பாராட்டுகின்றனர்.