close
Choose your channels

சானிடைசர் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்...

Wednesday, May 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சானிடைசர் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்...

 

கொரோனா தடுப்புக்காக உலகம் முழுவதும் சானிடைசர் பயன்படுத்துவோரின் அளவு அதிகரித்து இருக்கிறது. கொரோனா பரவலில் இது நல்ல பலனை அளித்தாலும் சில நேரங்களில் சிக்கலையும் ஏற்படுத்தி விடுகிறது. எனவே சானிடைசர் பயன்படுத்தும் போது சில முக்கியமான விஷயங்களையும் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். கொரோனாவுக்கு எதிராக எல்லோரும் சானிடைசர் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. என்ன வேலை செய்கிறோம் எங்கு இருக்கிறோம் என்பதைப் பொறுத்து இதன் பயன்பாடு மாறுபடவும் செய்கிறது.

சானிடைசரை விட சோப் நல்லது என Centrer for disease Control and Prevention (CDC) பரிந்துரைக்கிறது. சோப்பிலும் (Hard) கடினமான சோப் அவசியமில்லை எனவும் சாதாரண குளியல் அறைகளில் பயன்படுத்தும் சோப்பே போதுமானது எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். குறைந்தது 20 நிமிடம் வரை சோப்பைக் கொண்டு சுத்தமான முறைகளில் கைகளைக் கழுவினாலே எந்த வைரஸ் கிருமிகளும் நம்மை அண்டாது.

சானிடைசர் என்று சொன்னவுடன் பலருக்கும் மது பற்றிய நியாபகம் வந்துவிடுகிறது. சானிடைசரில் குறிப்பிட்ட அளவு ஆல்கஹால் இருக்கிறது என்பதற்காக சாராயம், மது போன்ற பொருட்களைப் பயன்படுத்துவது ஆபத்தில் முடியலாம். சானிடைசரில் அழுக்குகளைக் கழுவுவதற்காக குறிப்பிட்ட அளவு ஆல்கஹால் சேர்க்கப்படுகிறது. சில மருந்து பொருட்களிலும் ஆல்கஹால் சேர்க்கப்பட்டு இருக்கும். எனவே சமையல் அறைகளில் வேலை பார்க்கும்போது சானிடைசரைப் பயன்படுத்தாமல் சோப்பை பயன்படுத்துவதே சிறந்தது.

சோப்பை எல்லா இடங்களிலும் எளிமையாகப் பயன்படுத்த முடியாத காரணத்தால்தான் சானிடைசரின் பயன்பாடு அதிகரித்து இருக்கிறது. முக்கியமாக மருத்துத் துறைகளில் சானிடைசரின் பயன்பாடு அதிகம். அவர்களும் Sterillium வகையிலான சானிடைசரைத்தான் பயன்படுத்துகின்றனர். இது காற்றில் எளிதாக கரைந்துவிடும் தன்மையுடையது என்பதால் பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை. மேலும், சானிடைசர்கள் சருமப் பிரச்சனைகளையும் வரவழைக்கும் தன்மையுடையது. இதைத் தெரிந்து கொண்ட மருத்துவர்கள் பெரும்பாலும் சானிடைசரைப் பயன்படுத்தியப் பின்பு கிரீம்களைத் தடவிக் கொள்கின்றனர். Body lotion போன்ற எண்ணெயினால் செய்யப்பட்ட கிரீம்கள் இதற்கு நல்லப் பலனைத் தருகின்றன. சானிடைசரைவிட சோப்பை பயன்படுத்தை அதிகப்படுத்தினால் இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.