சூர்யா பிறந்த நாளில் ஒரு ஆச்சரியம்: ஜிவி பிரகாஷ் அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,July 11 2020]

தமிழ்த் திரையுலகின் மாஸ் நடிகர்களின் பிறந்தநாளின்போது சமூகவலைதளத்தில் காமன் டிபி போஸ்டர்களை பிரபலங்கள் வெளியிடுவது கடந்த சில வருடங்களாக வழக்கமாக உள்ளது. கடந்த மாதம் தளபதி விஜய்யின் பிறந்த நாளில் கூட ஒரே நாளில் பல திரையுலக பிரபலங்கள் காமன் டிபி போஸ்டர்களை தங்களுடைய சமூக வலைதளங்களில் வெளியிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் இம்மாதம் 23 ஆம் தேதி வரவிருப்பதை அடுத்து, இன்று திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் சூர்யாவின் காமடி டிபி போஸ்டர்களை தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர். இந்த போஸ்டர்கள் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சூர்யாவின் ’சூரரைப்போற்று’ திரைப்படத்திற்கு இசை அமைத்தவரும் பிரபல நடிகருமான ஜிவி பிரகாஷ், தனது சமூக வலைத்தளத்தில் ’சூர்யாவின் பிறந்த நாளன்று சூரரைப்போற்று படம் குறித்த ஒரு ஸ்பெஷல் அறிவிப்பு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். எனவே என்று சூரரைப்போற்று படத்தின் மிகப் பெரிய அப்டேட் மிக விரைவில் வெளி வரும் என்பதால் சூர்யா ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

More News

சீனாவை அடுத்து கஜகஜஸ்தானில் புதிய நோய்த்தொற்று: எச்சரிக்கை விடுக்கும் WHO!!!

சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் கஜகஜஸ்தானில் குடியிருக்கும் சீன மக்களுக்கு நேற்று ஒரு ரகசிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

கைது செய்யப்படுவீர்கள் என மிரட்டினார்கள்: சிபிசிஐடி குறித்து சுசித்ரா திடுக் தகவல்

சாத்தான்குளத்தில் தந்தை மகன் காவல் துறையினரால் அடித்து கொல்லப்பட்டா விவகாரம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதற்கு பாடகி சுசித்ராவின் வீடியோவும்

தங்கக்கடத்தல் அரங்கேறுவது எப்படி??? கேரள அரசியலையே ஆட்டிப்படைக்கும் புதிய சர்ச்சை!!!

கேரள முதலமைச்சரின் செயலாளர் முதற்கொண்டு முக்கியப் புள்ளிகள் சம்பந்தப்பட்ட விவகாரமாக தற்போது கேரளாவின் தங்கக்கடத்தல் வழக்கு மாறியிருக்கிறது

கட்டப்பா கதாபாத்திரத்திற்கு முதலில் தேர்வு செய்யப்பட்டவர்: விஜயேந்திர பிரசாத் தகவல் 

பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்பட பலர் நடித்த 'பாகுபலி' திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி,

2000ஐ நெருங்கும் தமிழக கொரோனா பலி எண்ணிக்கை: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் குறிப்பாக சென்னையிலும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வந்தாலும் கொரோனாவால் பலியாகி வருபவர்களின் எண்ணிக்கை தினமும் 60க்கும் மேல் உள்ளது