close
Choose your channels

நேற்று சிங்கிள் டிராக், இன்று லிரிக் வீடியோ: வேகம் எடுக்கும் வேலைக்காரன்

Tuesday, August 29, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இந்த படம் வரும் ஆயுதபூஜை திருநாளில் வெளியிட படக்குழுவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற உழைப்பாளர்களின் பெருமை பேசும் வகையில் உருவான 'கருத்தவன்ல்லாம் கலீஜாம்! கிளப்பிவிட்டாங்க! தக்காளி' என்ற சிங்கிள் பாடல் நேற்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.

இந்த நிலையில் இந்த பாடலின் லிரிக் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் டிரைலர் தயாராகி வருவதாகவும், வெகுவிரைவில் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் புரமோஷன்கள் வேகமெடுத்துள்ள நிலையில் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர், 'விவேகம்' படத்துடன் திரையரங்கிலும் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.