'இங்க என்ன நடக்குதுன்னு புரியாம பேசாத.. சோனியா அகர்வாலின் '7ஜி' த்ரில்லர் டீசர்..!

  • IndiaGlitz, [Monday,April 01 2024]

நடிகை சோனியா அகர்வால் நடித்த ‘7ஜி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில் இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஏற்கனவே பல பேய் திரைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில் இன்னொரு பேய் படமாக இந்த ‘7ஜி’ திரைப்படம் உருவாகி உள்ளது என்பது இந்த படத்தின் ஒரு நிமிட டீசரில் இருந்து தெரிய வருகிறது.

சோனியா அகர்வால் முக்கிய கேரக்டரில், ஸ்மிருதி வெங்கட் இன்னொரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தை ஹாரூன் என்பவர் இயக்கியுள்ளார். சித்தார்த் விபின் இசையில், கண்ணா ஒளிப்பதிவில், டான் போஸ்கோ படத்தொகுப்பில் உருவாக்கியுள்ள இந்த படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது

ஸ்மிருதி வெங்கட் மற்றும் சோனியா அகர்வால் வாழ்க்கையில் நுழையும் ஒரு பேய், அவர்களுக்கு என்னென்ன தொல்லை கொடுக்கிறது, அந்த பேயிடம் இருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள் என்பது தான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என டீசரில் இருந்து தெரிய வருகிறது.

திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் ஒரு நிமிட டீசர் த்ரில்லாக இருக்கும் நிலையில் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படம் சோனியா அகர்வாலுக்கு ஒரு நல்ல ரீஎண்ட்ரி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மகனுடன் ஆட்டோவில் சென்ற அருண்விஜய்.. இன்னிக்கு வீட்டுல செம்ம சமையல் போல..!

நடிகர் அருண் விஜய் தனது மகனுடன் ஆட்டோவில் மீன் மார்க்கெட் சென்று மீன் வாங்கிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து 'இன்னிக்கு வீட்டில் செம்ம

கமல், அஜித், மோகன்லால், சிரஞ்சீவியை அடுத்து இன்னொரு பிரபலத்துடன் த்ரிஷா .. AAA கூட்டணி..!

திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நாயகியாக நடித்து வரும் நடிகை த்ரிஷா தற்போது கமல்ஹாசன், அஜித், மோகன்லால், சிரஞ்சீவி என பிரபல நடிகர்களுடன் நடித்து கொண்டிருக்கும்

இப்ப வந்தா கூட அந்த படம் வெற்றி பெறும்: 10 வருடங்களாக முடங்கியிருக்கும் படம் குறித்து சுந்தர் சி

கடந்த 2013 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் உருவான 'மதகஜராஜா' என்ற திரைப்படம் 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக ரிலீஸ் ஆகாத நிலையில் அந்த படம்

நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது காவல்துறையில் புகார்.. 'பார்க்கிங்' பட கதைபோல் பிரச்சனை?

நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது அவரது பக்கத்து வீட்டு பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளதை அடுத்து ஹரிஷ் கல்யாண் நடித்த 'பார்க்கிங்' படத்தின் கதை போல் இருப்பதாக கூறப்படுகிறது.

வெற்றியோடு திரும்பி வருவேன்: ஜாபர் சாதிக் வழக்கின் சம்மன் குறித்து இயக்குனர் அமீர்..!

இயக்குனர் அமீருக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பி இருந்த நிலையில் அந்த சம்மன் குறித்து அமீர் கூறிய ஆடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.