பல ஆண்டுகால பிரச்சனையை ஒருசில மணி நேரங்களில் தீர்த்து வைத்த நடிகர் சோனுசூட்! வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Sunday,February 28 2021]

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்பட பல மொழிகளில் வில்லன் கேரக்டர்களில் நடித்தவர் பிரபல நடிகர் சோனு சூட். இவர் கொரோனா ஊரடங்கின்போது மக்கள் மனதில் ஹீரோவாக மாறினார் என்பதும் இவர் செய்த பல உதவிகள் குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு செய்த உதவிகள் யாராலும் மறக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி யார் என்ன உதவி கேட்டாலும் அந்த உதவியை அவர் உடனடியாக செய்து வரும் வழக்கத்தை உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் ஜான்சி என்ற கிராமத்தில் இருந்த ஒருவர் சோனுசூட் அவர்களை அணுகி, தங்களுடைய கிராமத்திற்கு தண்ணீர் வசதி இல்லை என்றும் பல கிலோமீட்டர்கள் சென்றுதான் தண்ணீர் எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக அந்த கிராமத்திற்கு ஒரு போர்வெல் போடுவதற்கு முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார். அடுத்த சில மணி நேரங்களில் அந்த கிராமத்தில் போர்வெல் போடப்பட்டு தற்போது அங்கு தண்ணீர் வசதி வழங்கப்பட்டிருக்கிறது

பல ஆண்டுகாலம் அரசியல்வாதிகளிடம் சொல்லி தீராத பிரச்சினையை ஒரு சில மணி நேரத்தில் சோனு சூட் செய்துள்ளார் என்பதும் இந்தியாவின் ரியல் ஹீரோ சோனு சூட் தான் என்றும் அவரை அந்த கிராமத்து மக்கள் பாராட்டி வருகின்றனர். இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஷ்ணுவிஷாலின் 'காடன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய விஷ்ணு விஷால் நடித்து முடித்துள்ள 'காடன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 

பிரபல இயக்குனரின் மகளுக்கு பாலியல் மிரட்டல்: ஒரே ஒரு புகைப்படம் காரணமா?

பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரும், தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'இமைக்கா நொடிகள்' என்ற படத்தில் வில்லனாக நடித்தவருமான அனுராக் காஷ்யப்

ஜெயலலிதா மடியில் உட்கார்ந்து காபி குடித்த 'மாஸ்டர்' பட நடிகை!

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியும் தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தில் நடித்த நடிகையுமான ரம்யா, குழந்தை பருவத்தில் இருந்தபோது முன்னாள் முதல்வர்

இளைஞர்கள் கூட இப்போ இபிஎஸ் பக்கமே… அதிரடி காட்டும் தமிழக முதல்வர்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளைத் தவிர பெண்கள், ஏழை-எளிய மக்கள் அதிலும் குறிப்பாக இளைஞர்களையும் கவர்ந்த முதலமைச்சராக வலம் வருகிறார்.

தேர்தல் தேதி அறிவிப்பை ஒட்டி ராஜதந்திரியாக மாறிய தமிழக முதல்வர்!

தமிழகச் சட்டப்பேரவை தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. தமிழகம் உட்பட மேலும் 4 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.