ஏழைகளின் நாயகன் நடிகர் சோனு சூட்டுக்கு சிறப்பு விருது வழங்க இருக்கும் ஐ.நா.!!!

  • IndiaGlitz, [Wednesday,September 30 2020]

 

இந்தியாவில் கொரோனா ஊரடங்கால் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்த பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டியவர் நடிகர் சோனு சூட். தன்னுடைய சொந்த செலவில் வெளி மாநிலங்களில் வேலைப்பார்த்து வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்து வந்ததோடு சிறப்பு விமானங்களையும் அவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்தார். மேலும் கொரோனா தாக்கத்தால் வேலை இழந்து தவித்து வந்த பலருக்கு மீண்டும் வேலைக் கிடைக்கவும் ஏற்பாடு செய்தார்.

அதோடு கர்நாடகாவில் விவசாயி ஒருவருக்கு டிராக்டரையே வாங்கிக் கொடுத்து அசத்தினார். ஆன்லைன் வகுப்புகளில் சில ஏழை மாணவர்கள் கலந்து கொள்ளவழி ஏற்படுத்திக் கொடுத்தார். இப்படி இவருடைய அடுக்கடுக்கான மனிதநேயச் செயல்கள் இந்திய அளவில் மிகவும் பாராட்டத்தக்க விஷயமாகப் பார்க்கப் பட்டது. மேலும் சில ஊடகங்கள் இவரைக் குறித்து ஏழைகளின் நாயகன் எனவும் பாராட்டு பத்திரங்களை வாசித்தன.

அந்த வகையில் தற்போது ஐ.நா அவை நடிகர் சோனு சூட்டிற்கு சிறப்பு விருதினை வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. கொரோனா நேரத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்காக பல்வேறு வகைகளில் உதவிகளைப் புரிந்த சோனு சூட்டின் மனிதநேயத்தைப் பாரட்டும் விதமாக சஸ்டைபள் டெவலெப்மெண்ட் கோல்ஸ் என்ற விருதினை ஐ.நா வழங்க இருக்கிறது. அதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகர் சோனு சூட் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கு என்னால் ஆன உதவிகளைச் செய்வேன் என்று கூறியுள்ளார்.

கொரோனா நேரத்தில் மக்களுக்காக நின்ற சிலருக்கு இப்படியான சர்வதேச விருதுகள் அறிவிப்பதைக் குறித்து பலரும் ஐ.நா விற்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். மக்கள் மத்தியில் புகழப்படும் நாயகர்களுக்கு இப்படியான சிறப்பு அடையாளங்கள் கிடைப்பது வரவேற்கத்தக்க ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சாவுல கூட நியாயம் இல்ல.. கவின் ஆவேச டுவீட்

உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து டுவிட் செய்த நடிகர் கவின், 'சாவில் கூட நியாயம் இல்லை' என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

துணை குடியரசு தலைவருக்கு கொரோனா தொற்று!!! மருத்துமனையில் அனுமதியா???

துணை குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடுவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது

ஐந்து இயக்குனர்களின் ஆந்தாலஜி திரைப்படம்: டைட்டில், ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் திரை உலகமே ஸ்தம்பித்துப் போய் இருந்த நிலையில் முன்னணி இயக்குனர்கள்

மும்பையில் புதிதாகப் பரவும் தடுப்பூசியே இல்லாத ரத்தக்கசிவு காய்ச்சல் நோய்!!! அதிர்ச்சி தகவல்!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்கனவே கொரோனா நோய் தாக்கம் கட்டுக்கடங்காமல் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் மும்பையின் பல்வேறு பகுதிகளில்

'புதிய பாதை 2' ஹீரோ யார்? பார்த்திபனின் பரபரப்பு தகவல்

பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்த முதல் திரைப்படம் 'புதிய பாதை'. கடந்த 1989ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது