கடவுள் என் அருகே இருந்தது போல் இருந்தது.. கும்பமேளா அனுபவம் குறித்து தமிழ் நடிகை..!


Send us your feedback to audioarticles@vaarta.com


உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக நடந்துவரும் நிலையில், இதில் பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், விஜய் சேதுபதி நடித்த 'சூது கவ்வும்' உள்பட சில திரைப்படங்களில் நடித்த நடிகை சஞ்சிதா ஷெட்டி இந்த கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக கூறி, தனது அனுபவங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
"நான் சிறுவயதில் பலமுறை திரிவேணி சங்கமத்திற்கு சென்று உள்ளேன். 90களில் நான் சிறுமியாக இருந்தபோது அந்த பகுதியில் இருந்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது. நான் இரண்டு வாரங்கள் கும்பமேளா நிகழ்ச்சிகளில் தான் இருந்தேன். மேலும் எனது ஆன்மிக குரு மற்றும் 500 சீடர்களுடன் முகாமில் தங்கி இருந்தேன். அது முற்றிலும் தெய்வீகமானது. நாங்கள் ஒவ்வொரு நாளும் காலை 4 மணியுடன் 4.30 மணி வரை நீராடி, பின்னர் தியானத்தில் இருப்போம்.
என் குழந்தைக்கால நண்பர்களில் பலரை அங்கு சந்தித்தேன். குறிப்பாக, ஜனவரி 29ஆம் தேதி மௌனி அமாவாசை தினத்தன்று அதிகாலை 2.30 மணிக்கு திரிவேணி சங்கமத்தில் நீராடினேன். அப்போது என் அருகில் கடவுள் இருந்ததைப் போல உணர்வு இருந்தது" என்று கூறியுள்ளார்.
'சூது கவ்வும்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமான சஞ்சிதா ஷெட்டி, சமீபத்தில் வெளியான இந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com