close
Choose your channels

'சூரரை போற்று': மோகன்பாபு கேரக்டர் குறித்த முக்கிய தகவல்

Friday, February 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகிய ’சூரரை போற்று’திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறைவு கட்டத்தில் உள்ளது. இந்த படம் ஏப்ரல் 16ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டாலும் மார்ச் மாதமே வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் ஏற்கனவே தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்தநிலையில் இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பது தெரிந்ததே. அவர் இந்த படத்தில் பக்தவச்சலம் நாயுடு என்ற கேரக்டரில் நடித்து இருப்பதாகவும் அவர் சூர்யாவிற்கு வழிகாட்டியான ஒரு கேரக்டரில் நடித்து இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் பக்தவத்சல நாயுடு என்பது மோகன்பாபுவின் ஒரிஜினல் பெயர் என்பதும் ஒரு அபூர்வ ஒற்றுமை ஆகும். மேலும் இந்த படத்தின் தமிழ் பதிப்பில் மோகன்பாபு தனது சொந்த குரலில் டப்பிங் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.