'சூரரை போற்று' ரிலீஸ் தேதி திடீர் தள்ளிவைப்பு: பரபரப்பு தகவல்

  • IndiaGlitz, [Wednesday,October 21 2020]

சூர்யா நடித்த ’சூரரை போற்று திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே முடிவு செய்யப்பட்டு முறையான அறிவிப்பும் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படம் வெளியாவதற்கு 5 நாட்களுக்கு முன்பே படத்தின் கிளியரன்ஸ் அனைத்தும் வரவேண்டும் என்றும், ஆனால் தற்போது வரை கிளியரன்ஸ் வராததால் இந்த படத்தின் ரிலீசை ஒத்திவைக்க அமேசான் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

சூரரைப்போற்று படத்தின் அறிவிக்கப்பட்ட ரிலீஸ் தேதிக்கு ஒன்பது நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படத்தின் புரமோஷன்கள் எதுவும் இல்லாமல் இருந்ததில் இருந்தே இந்த படம் குறிப்பிட்ட நாளில் வெளியாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது தற்போது அந்த சந்தேகம் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது

இந்த நிலையில் விரைவில் திரையரங்குகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஒருவேளை நேரடியாக திரையரங்குகளில் ’சூரரை போற்று திரையிடப்படுமா? அல்லது வேறு தேதியில் ஓடிடியில் வெளியாகுமா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்

More News

நான் உயிரோடு இருப்பது பிடிக்கவில்லையா? எஸ்.ஏ.சந்திரசேகர் ஆவேசம்!

தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் விரைவில் பாஜகவில் சேர இருப்பதாக

கதறி கதறி அழும் சுரேஷ்: என்ன காரணம்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று நடைபெற்று வரும் அரக்கர்கள் மற்றும் ராஜ வம்சத்தினர் டாஸ்க் விறுவிறுப்பாக இருக்கும்

பொங்கல் தினத்தில் ரிலீசாகும் முன்னணி நடிகரின் படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

வரும் பொங்கல் தினத்தில் ரஜினியின் 'அண்ணாத்த' அஜித்தின் 'வலிமை' உள்பட ஒருசில திரைப்படங்கள் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு

நீ வெளியில வாடா இப்ப: சுரேஷிடம் சனம் ஆவேசம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடந்து கொண்டிருக்கும் அரக்கர்கள், ராஜ வம்சம் டாஸ்க்கில் நேற்று சுவராசியம் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் இன்று சுவராசியம் உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

பிரபாகரன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் விஜய் சேதுபதி? பிரபல இயக்குனர் தகவல்

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்று கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில் அந்த படத்தில் இருந்து அவர் சமீபத்தில் விலகினார்