சூர்யாவின் 'சூரரை போற்று' படத்தின் அடுத்த அதிரடி அப்டேட்!

  • IndiaGlitz, [Wednesday,February 05 2020]

சூர்யா நடித்து முடித்துள்ள ’சூரரைப் போற்று’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் மற்றும் வியாபாரம் குறித்த பணிகளும் நடந்து வருவது தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற ’மாறாதீம்’ என்ற சூர்யா பாடிய பாடல் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த படத்தின் அடுத்த சிங்கிள் பாடலான ’வெய்யோன் சில்லி’ என்று பாடல் விரைவில் வெளியாகவிருப்பதாக இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்கள் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் ‘வெய்யோன் சில்லி’ என்ற பாடல் வரும் 13ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ‘வெய்யோன் சில்லி’ என்ற ஹேஷ்டேக் தற்போது டிரெண்டுக்கு வந்துள்ளது.

சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றது.
 

More News

சந்தானம் நடிக்கும் அடுத்த பட டைட்டில் குறித்த தகவல்

கடந்த ஆண்டு நடிகர் சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு 2', 'ஏ1' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதை இந்த ஆண்டு அவர் நடித்த 'டகால்டி' திரைப்படம் வெளிவந்து தற்போது திரையரங்குகளில் ஓடி வருகிறது

டப்பிங் யூனியன் தேர்தலில் போட்டியின்றி ராதாரவி வெற்றி: சின்மயி மனு என்ன ஆச்சு?

டப்பிங் யூனியன் சங்கத்திற்கு நடைபெறும் தேர்தலில் ராதாரவி அணி மற்றும் சின்மயி தலைமையிலான ராமராஜ்யம் அணி ஆகிய இரண்டு பேர் போட்டியிட்ட நிலையில் ராதாரவி போட்டியின்றி

ஏஜிஎஸ்-ஐ அடுத்து விஜய் வீட்டிலும் ஐடி ரெய்டு: பரபரப்பில் கோலிவுட் திரையுலகம்

தளபதி விஜய் நடித்த 'பிகில்' படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் அலுவலகங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வந்தன.

கோபுரத்தில் ஒலித்த தமிழ் மந்திரங்கள்..! 23 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பாக நடந்த தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு.

தஞ்சை குடமுழுக்கில் தமிழ் மற்றும் சமாஸ்கிருதத்தில் மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் தஞ்சையில் குவிந்துள்ளனர்.  

சுற்றுச்சூழல் பிரச்சாரம் - அண்டார்டிக்காவின் உருகும் பனிப்பாறைகளுக்கு நடுவே ஒரு நீச்சல் பயணம்

ஒரு ஆய்வில் கீரின்லாந்தில் பனிப்பாறைகளின் உருகும் தன்மை அதிகரித்து விட்டதை கடந்த ஆண்டு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள்