'சூரரை போற்று' கதை குறித்த முக்கிய ரகசியத்தை வெளியிட்ட சுதா கொங்காரா

  • IndiaGlitz, [Thursday,January 09 2020]

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தின் உருவாக்கிய சூரரைப்போற்று திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் கதை குறித்து ஒரு முக்கிய தகவலை இயக்குனர் சுதா கொங்கரா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த படத்தின் கதை பிரபலமான விமான நிறுவனர் ஜி ஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு என்று அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியான நிலையில் இந்த படத்தின் கதை முழுக்க முழுக்க கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு கதை அல்ல என்றும் ஆனால் இந்த படத்தில் நடக்கும் சம்பவங்கள் அவருடைய வாழ்க்கையிலும் நடந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

ரூ.6000 கையில் வைத்திருந்த ஒரு முன்னாள் ராணுவ வீரர் எப்படி ஒரு ஏர்லைன்ஸ் நிறுவனராக மாறினார் என்பது ஆச்சரியமான ஒரு விஷயம் என்றும், ஜிஆர் கோபிநாத் குறித்து நம்மில் பலருக்கு தெரியாது என்பதால் இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதியதாக இருக்கும் என்றும் இயக்குனர் மேலும் தெரிவித்தார்.

மேலும் இந்த படத்தை சூர்யாவே தயாரிக்க முன்வந்தது ஒரு முக்கிய விஷயம் என்றும், இந்த படத்தின் பட்ஜெட் அதிகமாகும் என்பதால் மற்ற தயாரிப்பாளர்களிடம் இதனை கொடுத்தால் பல கேள்விகள் எழும் என்பதற்காக சூர்யாவை சொந்தமாக தயாரித்ததாகவும் இந்த படத்திற்காக வாடகைக்கு ஒரு விமானத்தை எடுத்ததாகவும் அதன் வாடகை ஒரு நாள் ஒன்றுக்கு 47 லட்சம் என்றும் ஆனால் அதுகுறித்து தயாரிப்பாளர் சூர்யா ஒரு கேள்வியும் கேட்கவில்லை என்றும் இயக்குனர் புகழாரம் சூட்டினார்.

More News

தோல்வியிலிருந்தும் கற்றுக் கொள்ளலாம்.

நாம் திட்டமிட்டப்படி பல நேரங்களில் எதுவும் சரியாக நடப்பதில்லை. அதனால் தோல்வியைத் தழுவும்  பலரும் தங்களை நொந்து கொள்ளத் தொடங்கி விடுகின்றனர்

எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துப்போம்.. ஈரானுக்கு தூது விடும் ட்ரம்ப்.

இரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் எந்தவிதமான முன் நிபந்தனைகளும் இன்றி பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

2020 - சென்னையில் பிரம்மாண்ட புத்தகக் கண்காட்சி

உண்மையான வாசகன், வாசிப்பதை எப்பொழுதும் முடிப்பதே இல்லை! – ஆஸ்கார் வைல்ட்.

படம் வந்து ஒரு நாள் முடிவடைவதற்குள் இணையத்தில் வெளியான தர்பார்..! ரசிகர்கள் அதிர்ச்சி.

தர்பார் திரைப்படம் வெளியான நிலையில் அப்படத்தின் தியேட்டர் பிரிண்ட் இணையத்தில் வெளியாகிவிட்டது.

#CAA க்கு ஆதரவாக பேசவந்த பாஜக எம்.பியை 6 மணி நேரம் நகரவிடாமல் சிறை பிடித்த மாணவர்கள்..!

மேற்கு வங்க மாநிலத்தின் சாந்திநிகேதனில் குடியுரிமை திருத்த சட்டத்தை விளக்கிப் பேச வந்த பா.ஜ.க ராஜ்யசபா எம்.பி ஸ்வப்பன் தாஸ் குப்தாவை, மாணவர்கள் 6 மணி நேரம் சிறைபிடித்து வைத்தனர்.