ஆஸ்கார் விருதுக்கு செல்கிறது 'சூரரை போற்று'

  • IndiaGlitz, [Tuesday,January 26 2021]

சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையமைத்த ‘சூரரைப்போற்று’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஓடிடியில் ரிலீஸ் ஆனது என்பதும் இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே

இந்த படத்திற்கு திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்துக்களை குவித்து வந்த நிலையில் தற்போது மேலும் ஒரு மகுடமாக இந்த படம் ஆஸ்கார் விருதுக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

ஆஸ்கார் விருதின் பொதுபிரிவில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த இசை மற்றும் ஒருசில பிரிவுகளில் இந்த படம் போட்டிக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தகவலை 2டி நிறுவனத்தின் ராஜசேகர பாண்டியன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளதை அடுத்து சூர்யா ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்

ஆஸ்கார் விருதுக்கு செல்லும் ‘சூரரைப்போற்று’ திரைப்படம், ஆஸ்கார் விருதுகளை அள்ளிக் கொண்டு வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்