close
Choose your channels

நடுவானில் சூரரைப்போற்று இசை வெளியீடு: கலந்து கொள்ளும் 100 பிரபலங்கள் யார் தெரியுமா?

Wednesday, February 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகியுள்ள ’சூரரைப்போற்று’ என்ற திரைப்படத்தின் பாடல் வெளியீடு நாளை ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் நடுவானில் நடைபெற உள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த விமானத்தில் சென்று பாடல் வெளியிட்டு விழாவில் பங்கேற்கும் 100 பேர் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. தமிழகமெங்கும் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு இந்த சிறப்பு விமானத்தில் பயணம் செய்யவுள்ளனர்.

முதன் முறையாக விமானத்தில் பயணம் செய்ய உள்ள இந்த மாணவ, மாணவிகள் முன்னிலையில் தான் நடுவானில் ’சூரரைப்போற்று’ படத்தின் பாடல் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சூர்யா இந்தப் படத்தில் நடித்து வரும் நெடுமாறன் ராஜாங்கம் என்ற கேரக்டர் ஒரு கடிதம் எழுதுவதுபோல் எழுதப்பட்டுள்ளது

மேலும் இந்த ஏற்பாட்டுக்கு உதவியாக இருந்த ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவன சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டர் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் சூர்யாஅந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்

உலக சினிமா வரலாற்றில் முதல்முறையாக நடுவானில் பள்ளி குழந்தைகள் மத்தியில் ஒரு திரைப்படத்தின் பாடல் வெளியீடு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.