ஜெயிக்கிறது என்னிக்குமே என் சொக்கன் தான்: சூரியின் 'கருடன்' டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ..!

  • IndiaGlitz, [Friday,January 19 2024]

சூரி மற்றும் சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த கிளிம்ப்ஸ் வீடியோவில் சசிகுமார் முன் சிலர் குற்றவாளி போல் இருக்க அதில் ஒருவர் தப்பித்து போக முயற்சிக்கிறார். அப்போது ’விஸ்சுவாசத்தில் மனுஷனுக்கும் நாய்க்கும் போட்டி வந்தால், எப்பவுமே நாய் தான் ஜெயிக்கும், ஆனா அதே நாய்க்கும் சொக்கனுக்கும் போட்டி வந்தால் ஜெயிக்கிறது எப்பவுமே என் சொக்கன் தான் என்ற வசனத்துடன் ’கருடன்’ என்ற டைட்டிலுடன் இந்த கிளிம்ப்ஸ் வீடியோ முடிவுக்கு வருகிறது. இதில் சொக்கனாக சூரி நடித்துள்ளார்.

சூரி மற்றும் சசிகுமார் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் உன்னி முகுந்தன், ரேவதி சர்மா, ரோஷினி ஹரிப்பிரியன், சமுத்திரகனி, மைம் கோபி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிய இந்த படத்தின் கதையை இயக்குனர் வெற்றிமாறன் எழுத, ஆர்எஸ் துரை செந்தில்குமார் இயக்கி உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'லெஜெண்ட் சரவணன்' நடிக்கும் அடுத்த படம்: அவரே கொடுத்த சூப்பர் அப்டேட்..!

பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் நடித்த 'லெஜெண்ட் ' என்ற திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த சூப்பர் அப்டேட்டை அவரே தெரிவித்துள்ளார்.

'அயலான்' சிவகார்த்திகேயனை பாராட்டாமல் சூர்யா பாராட்டியது யாரை தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' திரைப்படம் சமீபத்தில் பொங்கல் விருந்தாக வெளியான நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் பல திரை உலக பிரபலங்களும்

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைத்திட துணை நிற்போம்: திமுக எம்.எல்.ஏ பணிப்பெண் குறித்து பா ரஞ்சித்..!

பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ குடும்பத்தினரால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியும் நிவாரணமும் தாமதமின்றி கிடைத்திட துணை நிற்போம் என இயக்குனர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

பாஜகவில் இருந்து விலகிய நடிகை அதிமுகவில்.. எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்தார்..!

கடந்த சில வருடங்களாக பாஜகவில் இருந்த நடிகை  சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகிய நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அவர் அதிமுகவில் இணைந்துள்ளார்.  

இன்ஜினியரிங் என்ன நம்ம குலத்தொழிலா? 'சிங்கப்பூர் சலூன்' டிரைலர்

ஆர்ஜே பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன்' என்ற திரைப்படம் வரும் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.