வெற்றிமாறன் - சூரி படத்தின் டைட்டில், பர்ஸ்ட்லுக் போஸ்டர்!

  • IndiaGlitz, [Thursday,April 22 2021]

தனுஷ் நடித்த ‘அசுரன்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் அடுத்த திரைப்படத்தில் சூரி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் விஜய் சேதுபதி இந்த படத்தில் ஒரு கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் நடந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் இந்த படத்திற்கு ’விடுதலை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியாகியுள்ளது

விஜய் சேதுபதியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படத்திற்கு எதிர்பார்த்தபடியே ’விடுதலை’ என்ற டைட்டில் தான் வைக்கப்பட்டுள்ளது சூரி மற்றும் விஜய் சேதுபதி தனித்தனியே இருக்கும் இரண்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகின்றன. இந்த படத்தில் சூரி போலீஸ் கேரக்டரிலும், விஜய்சேதுபதி கைதி கேரக்டரில் நடித்து இருப்பது போன்று போஸ்டர்கள் கூறுகின்றன

இளையராஜா இசையில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது

More News

சுந்தர் சியின் 'அரண்மனை 3': ஃபர்ஸ்ட்லுக், மோஷன் போஸ்டர் ரிலீஸ்

சுந்தர் சி நடித்த இயக்கி வரும் 'அரண்மனை 3' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று

அரசிடம் அனுமதி கேட்ட 'அண்ணாத்த' படக்குழு: அனுமதி கிடைக்குமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

'தளபதி 65' நாயகி பூஜா ஹெக்டேவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 65' படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது.

த்ரிஷாவின் அடுத்த படமும் ஓடிடி ரிலீஸா?

த்ரிஷாவின் 'பரமபதம் விளையாட்டு' என்ற திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ஓடிடியில் வெளியானது என்பது தெரிந்ததே. த்ரிஷாவுடன், நந்தா, ரிச்சர்ட்ஸ், வேலராமமூர்த்தி

'குக் வித் கோமாளி' ஷிவாங்கி நடிக்கும் அடுத்த படத்தின் தகவல்!

சமீபத்தில் முடிவடைந்த 'குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 'குக்'கள் மற்றும் கோமாளிகள்