close
Choose your channels

அன்பு தங்கச்சிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய சூரி!

Saturday, October 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அன்பு தங்கச்சிக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என நடிகர் சூரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது

தமிழ் திரையுலகம் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வரும் கீர்த்தி சுரேஷ், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களிலும், போன் மூலமும் நேரிலும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் காமெடி நடிகர் சூரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’திறமைமிக்க என் அன்பு தங்கச்சி கீர்த்தி சுரேஷுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு பாசிட்டிவ் கமெண்டுகள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் ’அண்ணாத்த’ திரைப்படத்தில் சூரி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் அண்ணன் தங்கையாக நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.