இது எனக்கு ஒரு ஸ்பெஷல் ரிவ்யூ! தாய்மாமனை நினைத்து கதறியழுத பாப்பா.. சூரி வெளியிட்ட வீடியோ..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சூரி நடித்த 'மாமன்’ என்ற திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் குடும்பத்துடன் பார்க்க கூடிய ஒரு எமோஷனலான படம் என்று படம் பார்த்தவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் இந்த படம் எதிர்பார்த்ததை விட அதிக வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த ஒரு பாப்பா தன்னுடைய தாய் மாமனை நினைத்து ஏங்கி அழுது நிலையில் அவருடைய உறவினர்கள் சூரிக்கு வீடியோ கால் போட்டு பேச வைத்தனர்.
அப்போது ஏன் பாப்பா அழுகிறாய் என்று அந்த பாப்பாவுக்கு சூரி ஆறுதல் கூறும் காட்சிகள் உள்ளன. இதை அடுத்த சூரி தனது சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோவை வெளியிட்டு கூறியிருப்பதாவது:
இது எனக்கு ஒரு ஸ்பெஷல் ரிவ்யூ!
“மாமன்” படம் பார்த்த பிறகு, இந்த பாப்பா தன்னுடைய தாய்மாமாவை ரொம்பவே மிஸ் பண்ணுறா…
இதுபோன்ற உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய ஒரு தருணம் கிடைத்தது என்பது ரொம்பவே சந்தோஷமாக இருக்கு.
தன்னுடைய அன்பான மாமாவை மனதில் வைத்து நினைத்து வருகிற இந்த பாப்பாவின் தாய்மாமனுக்கு, இந்த படத்தின் வாயிலாக என் அன்பும், மனமார்ந்த வாழ்த்துகளும்! இவ்வாறு சூரி குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.
இது எனக்கு ஒரு ஸ்பெஷல் ரிவ்யூ!
— Actor Soori (@sooriofficial) May 16, 2025
“மாமன்” படம் பார்த்த பிறகு, இந்த பாப்பா தன்னுடைய தாய்மாமாவை ரொம்பவே மிஸ் பண்ணுறா…
இதுபோன்ற உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய ஒரு தருணம் கிடைத்தது என்பது ரொம்பவே சந்தோஷமாக இருக்கு.
தன்னுடைய அன்பான மாமாவை மனதில் வைத்து நினைத்து வருகிற இந்த பாப்பாவின்… pic.twitter.com/4kvoghXsma
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com