இந்த உலகத்தில நீ பார்க்கும் முதல் முகம் இந்த மாமன் முகம்தான்: சூரியின் 'மாமன்' டிரைலர்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் சூரி ஹீரோவாக நடித்துள்ள ’மாமன்’ என்ற திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் ட்ரெய்லர் சற்றுமுன் வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.
கர்ப்பமாக இருக்கும் அக்காவிடம் வரும் சூரி, “வயிற்றில் இருக்கும் மகனுக்கு காது முளைத்துவிட்டது... நாம் பேசுவதெல்லாம் அவனுக்கு கேட்கும்” என்று சொன்ன பின்னர் “என்ன பெத்தாரு....மாமன் வர்ரேன் டா...... இந்த உலகத்தில் நீ பார்க்கும் முதல் முகம் இந்த மாமன் முகமாகத்தான் இருக்க வேண்டும். உன்னை நான் தான் குளிப்பாட்டுவேன், நான்தான் பவுடர் போட்டு விடுவேன்...” என்று பாசத்துடன் கூறும் காட்சி ட்ரெய்லரின் தொடக்கத்தில் இடம் பெற்றுள்ளது.
“உனக்கு பாசம் காட்ட அப்பா, அம்மா, செல்லம் கொடுக்க தாத்தா, பாட்டி, உன்னை அன்பாக அறிவாக வளர்க்க அழகான அத்தை இருக்குடா...” என வயிற்றில் இருக்கும் குழந்தையுடன் சூரி பேசும் நெகிழ்ச்சியான காட்சிகள் ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ளன.
முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் காட்சிகளுடன் அமைந்துள்ள இந்த படம், குடும்ப ஆடியன்ஸ்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, ட்ரெய்லர் வெளியான பின்னர், இந்த படத்தின் எதிர்பார்ப்பு இருமடங்குக்கு மேல் அதிகரித்துள்ளதாகவும் தெரிகிறது.
சூரி ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தில், ராஜ்கிரண், விமல், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, பாபா பாஸ்கர், பாலசரவணன், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், சாயாதேவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஹேஷம் அப்துல் வகாப் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் இம்மாதம் 16ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments