close
Choose your channels

சினிமாக்காரனுக்கு சிங்கிள் டீயும் ஓவியம்தான்: சூரியின் வைரல் வீடியோ

Tuesday, December 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் சூரி என்பதும் அவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ உள்பட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் சூரி, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒரு டேபிளின் மீது சுடச்சுட சிங்கிள் டீ ஒன்று இருக்கும் வீடியோவை வெளியிட்ட நடிகர் சூரி, அதில் ’சினிமாக்காரனுக்கு சிங்கிள் டீயும் ஓவியம்தான், ரெண்டு நிமிஷ ஷாட், ரெண்டு மணி நேர படம் பார்த்த திருப்திய கொடுத்துருச்சுனே, மனசெல்லாம் சந்தோஷம்னே’ என்று பதிவு செய்துள்ளார். சூரியின் இந்த வீடியோவும் பதிவும் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.