விஜய் அழைத்தால் கட்சியில் சேருவீர்களா? நான் பிசியாக இருக்கிறேன்.. சூரியின் பதில்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


விஜய் அழைத்தால், அவருடைய தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைவீர்களா? என்ற கேள்விக்கு, "நான் பிஸியாக இருக்கிறேன்; எனக்கு வேலைகள் நிறைய இருக்கிறது," என்று நடிகர் சூரி பதில் அளித்துள்ளார்.
'சூரியன் நடிப்பில் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவான 'மாமன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்த படம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய சூரி, படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்புக்கு தனது நன்றியை தெரிவித்தார்.
அப்போது, விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில் "அவர் அழைத்தால், அவருடைய கட்சியில் சேருவீர்களா? தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வீர்களா? எனக் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் கூறிய சூரி, "எனக்கு நிறைய திரைப்பட வேலைகள் இருக்கிறது. அதை பார்க்க வேண்டும். உங்களை நான் திடீரென அழைத்தால், என்னோடு நீங்கள் வருவீர்களா?" என்று கேட்டார். மேலும், "நடிகர் விஜய் சரியான திசைகளில் சென்று கொண்டிருக்கிறார். என் வேலையை நான் பார்க்கிறேன்," என்றும் கூறினார்.
இதிலிருந்து, விஜய் அழைத்தாலும், அவருடைய கட்சியில் சூரி இணைய வாய்ப்பு குறைவாகவே உள்ளது என்பது தெளிவாகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments