சூரியின் அடுத்த படத்தின் டைட்டில் போஸ்டர்.. இயக்குனர், தயாரிப்பாளர், இசை யார்?


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் சூரி, கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடித்த திரைப்படங்கள், நல்ல வெற்றியை பெற்று வசூலையும் வாரி குவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில், சற்றுமுன் சூரி ஹீரோவாக நடித்திருக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புடன், டைட்டில் போஸ்டரும் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனத்தின் எல்ரெட் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு ’மண்டாடி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை, வெற்றிமாறனிடம் உதவியாளராக இருந்து 'ஜிவி பிரகாஷ் நடித்த செல்பி' என்ற படத்தை இயக்கிய மதிமாறன் புகழேந்தி என்பவர் இயக்க உள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு, எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவும், பிரதீப் படத்தொகுப்பு பணியும் செய்ய உள்ளனர்.
மேலும், இந்த போஸ்டரில் படைப்பாக்க தயாரிப்பாளர் வெற்றிமாறன் என்றும், தயாரிப்பு எல்ரெட் குமார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் போஸ்டர் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த டைட்டில் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
நடுக்கடலில் ஒரு கப்பல் தீப்பிடித்து எரிவது போன்று இருக்கும் இந்த போஸ்டரை பார்க்கும்போது, படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
#Mandaadi ⛵🔥 When the sea carries secrets, the fire will tell us stories 🌊⚓
— RS Infotainment (@rsinfotainment) April 18, 2025
First Look from Tomorrow ❤️🔥#Mandaadi #MandaadiTitleLook @sooriofficial @elredkumar @rsinfotainment #VetriMaaran @MathiMaaran @gvprakash @PeterHeinOffl #Azar @srkathiir @KiranDrk@pradeepERagav… pic.twitter.com/Mn0R2P8NLs
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments