close
Choose your channels

'தலைவர் 168' படத்தில் ரஜினியுடன் முதல்முறையாக இணையும் பிரபல காமெடி நடிகர்!

Tuesday, October 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில், லைகா தயாரிப்பில் உருவாகியுள்ள ’தர்பார்’ திரைப்படம் வரும் பொங்கலன்று பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ’தலைவர் 168’ திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நாயகி உட்பட முக்கிய நட்சத்திரங்கள் தேர்வு செய்யும் பணிகள் சிறுத்தை சிவா ஈடுபட்டுள்ளார். இதன்படி இந்த படத்தில் நாயகியாக ஜோதிகா, மஞ்சுவாரியார், கீர்த்தி சுரேஷ் உள்பட ஒரு சில நடிகைகள் பரிசீலனையில் இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் இந்த படத்தில் காமெடி கேரக்டரில் நடிக்க நடிகர் சூரி ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால் ரஜினியின் படத்தில் முதன்முதலாக சூரி நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சிறுத்தை சிவா இயக்கிய ’வேதாளம்’ படத்தில் ஏற்கனவே சூரி நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.