close
Choose your channels

'விடுதலை' படத்தின் முக்கிய அப்டேட்டை கொடுத்த சூரி.. வைரல் புகைப்படங்கள்!

Saturday, December 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வந்த 'விடுதலை’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக கூறி தனது சமூக வலைத்தளத்தில் சூரி பதிவு செய்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வந்த 'விடுதலை’ என்ற படம் இரண்டு பாகங்களாக உருவாகி வந்த நிலையில் தற்போது இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முடிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து முதல் பாகத்தை முதலில் ரிலீஸ் செய்யக் கூடிய பணிகளை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை நடிகர் சூரி உறுதி செய்ததோடு நிறைவு நாளில் அனைவரும் இணைந்து எடுத்த புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

முதல் பாகத்தில் சூரி முக்கிய வேடத்திலும் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள படம் வெற்றிமாறனின் அடுத்த வெற்றிப் படமாகவும் விருதுபெறும் படமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் 'விடுதலை’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அவர் சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்’ என்ற படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அவர் ஓடிடிக்காக ஒரு வெப்தொடரையும் உருவாக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.