சாரி தம்பி சார்! சூர்யா டுவிட்டுக்கு பதிலளித்த கமல்ஹாசன்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது தெரிந்ததே. குறிப்பாக இந்த படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகிய மூவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்து இருக்கின்றனர் என்பதும், லோகேஷ் கனகராஜ் திரைக்கதையும் அனிருத்தின் பின்னணி இசையும் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’விக்ரம்’ படத்தில் கடைசி ஐந்து நிமிட சூர்யாவின் காட்சி ரசிகர்களுக்கு போனஸாக இருந்தது. அதுமட்டுமின்றி அடுத்த பாகத்தில் சூர்யா தான் வில்லன் என்று கோடிட்டுக் காட்டப்பட்டதை அடுத்து, அடுத்த பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்னர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் ’கமலஹாசனுடன் நடிக்க வேண்டும் என்பது தனது கனவு என்றும், அது தற்போது நிறைவேறி விட்டது என்றும், அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள கமல்ஹாசன், ‘இது நீண்ட நாட்களாக நடக்க இருந்தது என்பது உங்களுக்கு தெரியும். அன்பு உங்களுக்கு ஏற்கனவே இருக்கிறது, அதனை மேலும் மக்களிடம் அதிகரியுங்கள்! உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் தம்பி! மன்னிக்க தம்பி சார்’ என்று பதிலளித்துள்ளார்.

சூர்யாவின் பதிவும் அதற்கு பதிலளித்துள்ள கமல்ஹாசனின் பதிவும் தற்போது வைரலாகி வருகிறது.

More News

'எப்படி சொல்றது என்றே தெரியவில்லை': 'விக்ரம்' படம் குறித்து சூர்யா!

உலகநாயகன் கமலஹாசன் நடித்த 'விக்ரம்'  திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது என்பதும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி சினிமா பார்வையாளர்கள்,

கமல்ஹாசனின் 'விக்ரம்' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

கமலஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் நேற்று பிரமாண்டமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது என்பதும் இந்த படத்தின் முதல் காட்சி முடிந்தவுடன் பாசிட்டிவ் விமர்சனங்கள்

அட்லியின் 'ஜவான்' டீசரை பார்த்து சமந்தா என்ன சொன்னார் தெரியுமா?

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜவான்' படத்தின் டீசர் வெளியாகி இணையதளங்களில் வைரலானது என்பதை பார்த்தோம்.

முதல் நாளே 'விக்ரம்' படத்தை மகளுடன் பார்த்த ஷாலினி அஜித்: என்ன சொன்னார் தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நேற்று வெளியான 'விக்ரம்' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும்

காதலரை திருமணம் செய்யாமல் இருப்பதற்கு இந்த ஒரு காரணம் தான்: ஸ்ருதிஹாசன்

உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும், நடிகையுமான ஸ்ருதி ஹாசன் தற்போது தனது காதலர் சாந்தனு என்பவருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகிறார்.