close
Choose your channels

இணையத்தில் வைரலாகும் செளந்தர்யா-விசாகன் ஹனிமூன் புகைப்படங்கள்

Saturday, February 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா, கடந்த 11ஆம் தேதி தொழிலதிபர் விசாகனை திருமணம் செய்தார். இந்த திருமணத்தில் தமிழக முதல்வர், துணைமுதல்வர் உள்பட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல் அன்று மாலை நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானி உள்பட பல முக்கிய பிரபலங்கள் புதுமணத்தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் புதுமணத்தம்பதிகளான விசாகன் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் ஐஸ்லாந்து நாட்டிற்கு தேனிலவு சென்றுள்ளனர். இதனை இருவரும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் புகைப்படங்களுடன் பதிவு செய்துள்ளனர். கடுங்குளிரில் பனி உறைந்த பகுதியில் இருவரும் தேனிலவு கொண்டாடி வரும் நிலையில் இந்த புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.

இந்த தேனிலவு பயணத்தில் தனது மகனை மிஸ் செய்தாலும் அன்பான கணவர் கிடைத்துள்ளதால் கடவுளுக்கு நன்றி கூறுவதாக செளந்தர்யா தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.