அஜித்தின் அடுத்த படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்குவாரா?

  • IndiaGlitz, [Wednesday,July 19 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இளையமகளும், 'கோச்சடையா', 'விஐபி 2' படங்களின் இயக்குனருமான செளந்தர்யா ரஜினிகாந்த் தற்போது 'விஐபி 2' படத்தின் புரமோஷன்களில் பிசியாக உள்ளார். இந்த படம் அவருடைய திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த சில தகவல்கள் இணையதளங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த செளந்தர்யா ரஜினிகாந்த், 'எந்த நடிகரை எதிர்காலத்தில் இயக்க விரும்புகின்றீர்கள்' என்ற கேள்விக்கு அவர் 'அஜித்' என்று பதிலளித்துள்ளார்.

இந்த பதிலில் இருந்து அஜித் படத்தை இயக்க செளந்தர்யா ஆர்வமாக இருப்பதாக தெரிகிறது. தல அஜித் தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் பொறுப்பை செளந்தர்யாவுக்கு கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

விஷாலின் 'துப்பறிவாளன்' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் 'துப்பறிவாளன்' படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு எந்த நேரத்தில் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது...

சச்சின் தெண்டுல்கருடன் கைகோர்த்தார் கமல்ஹாசன்

ஒருபக்கம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பரபரப்பு, இன்னொரு பக்கம் தமிழக அரசியல்வாதிகளுக்கு சிம்மசொப்பனமாக இருந்து வரும் கமல்ஹாசன் தற்போது கிரிக்கெட் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கருடன் கைகோர்த்துள்ளார்...

கமல்ஹாசனின் முதல்வர் கவிதை! அரசியலுக்கு தயாராகிவிட்டாரா?

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாகவே தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் தமிழக அமைச்சர்கள் அவரை மிரட்டும் தொனியில் ஒருசில கருத்துக்களை கூறினர்...

ஷாப்பிங் சென்றாரா சசிகலா? வைரலாகும் வீடியோவால் பரபரப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று பெங்களூர் சிறையில்  தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, சிறையில் தனி சமையல் அறை உள்ளிட்ட வசதிகளை லஞ்சம் கொடுத்து பெற்றதாக முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா குற்றம் சாட்டியிருந்தார்...

கமல்ஹாசனிடம் ரூ.100 கோடி கேட்டு வழக்கு: அரசியல் கட்சி தலைவர் அறிவிப்பு

உலகநாயகன் கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம், சர்ச்சைக்குரிய வார்த்தை ஒன்றை கடந்த சில நாட்களுக்கு முன் இன்னொரு நடிகையை பார்த்து கூறினார்...