நடிகை சௌந்தர்யா மரணத்திற்கு மோகன்பாபு தான் காரணமா? கணவர் ரகு விளக்கம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை சௌந்தர்யா மரணத்திற்கு நடிகர் மோகன் பாபு தான் காரணம் என சிட்டி மல்லு என்பவர் காவல்துறையில் புகார் அளித்துள்ள நிலையில், சௌந்தர்யாவின் கணவர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல நடிகை சௌந்தர்யா, கடந்த 2004 ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். அவரது மரணம் பெரும் சர்ச்சைக்கு உள்ளான நிலையில், 21 ஆண்டுகள் கழித்து, சௌந்தர்யாவின் மரணம் விபத்து அல்ல, கொலை என சிட்டி மல்லு என்பவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
சௌந்தர்யாவின் நிலத்தை அபகரிக்க நடிகர் மோகன் பாபு முயற்சி செய்ததாகவும், இதன் காரணமாகத்தான் அவர் சௌந்தர்யாவை கொலை செய்திருக்கலாம் என்றும், இது குறித்து விரிவான விசாரணை தேவை என்றும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சௌந்தர்யாவின் கணவர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். "மோகன் பாபுவுடன் நாங்கள் 25 ஆண்டுகளுக்கு மேலாக நல்ல நட்புடன் இருக்கிறோம். என் மனைவியின் மரணம் குறித்து தவறான தகவல் பரவி வருகிறது. சொத்து தொடர்பாக பரவி வரும் ஆதாரமற்ற செய்திகள் அனைத்தையும் நான் மறுக்கிறேன்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com