close
Choose your channels

மீண்டும் களமிறங்கும் செளந்தர்யா ரஜினிகாந்த்.. ஹீரோ இந்த பிரபலமா?

Thursday, June 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் மீண்டும் திரையுலகில் களம் இறங்க உள்ளதாகவும் அவர் அமேசான் பிரைம் ஓடிடிக்காக ஒரு வெப் தொடரை இயக்க இருப்பதாகவும் அதில் ஒரு பிரபல நடிகர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ’படையப்பா’ ’பாபா’ ’சந்திரமுகி’ ’சிவாஜி’ உள்ளிட்ட படங்களுக்கு கிராபிக் டிசைனராக பணியாற்றினார் என்பதும் குறிப்பாக டைட்டில் உள்ள கிராபிக்ஸ் காட்சிகளை அவர்தான் வடிவமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ’கோவா’ என்ற திரைப்படத்தை தயாரித்த சௌந்தர்யா ரஜினிகாந்த் ’கோச்சடையான்’ மற்றும் ’வேலையில்லா பட்டதாரி 2’ ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் 6 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் சினிமாவில் அவர் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் அமேசான் பிரைம் ஓடிடிக்காக ஒரு வெப் தொடர் இயக்க இருப்பதாகவும் அதில் சத்யராஜ் முன்னணி கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வெப் தொடர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் சகோதரி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ’லால் சலாம்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.