லைகா நிறுவனத்தின் அடுத்த படத்தில் ரஜினிகாந்த் மகள்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுபாஷ்கரன் அவர்களின் லைகா நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பில் ரஜினிகாந்த் மகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகில் தற்போது லைகா நிறுவனம் ’பொன்னியின் செல்வன்’ என்ற மெகா பட்ஜெட் படத்தை தயாரித்து வருகிறது என்பதும் அதுமட்டுமின்றி ‘டான்’ உள்பட ஒருசில தமிழ் திரைப்படங்களையும் இரண்டு ஹிந்தி படங்களையும் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் லைகா நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தை ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா தனுஷ் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவிருக்கும் இந்த படத்தின் கதையை சஞ்சீவி என்பவர் எழுதியுள்ளார். இது ஒரு குடும்ப கதை என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா தனுஷ் ’3’ மற்றும் ‘வை ராஜா வை’ ஆகிய படங்களை இயக்கி இருந்தார் என்றும் இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இந்த 20 பேர்களில் பிக்பாஸ் போட்டியாளர்கள் யார் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளை முதல் தொடங்கியிருக்கும் நிலையில் இன்றே அதன் படப்பிடிப்புகளும் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அல்லாவும் சிவனும் சேர்ந்து உங்க மூலமா ஏதோ நடக்கனும்ன்னு நினைக்கிறாங்க: 'மாநாடு' டிரைலர்

முதலமைச்சரை கொலை செய்ய போகிறார்கள் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் சிம்பு அவரை காப்பாற்ற முயற்சிக்கும் கதைதான் 'மாநாடு' என்பது இந்த படத்தின் டிரெய்லரில் இருந்து தெரியவருகிறது. 

'உச்சந்தலை ரேகையிலேயே': மிஷ்கினின் 'பிசாசு 2' பாடல் ரிலீஸ்!

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், ஆண்ட்ரியா நடிப்பில், உருவாகிவரும் 'பிசாசு 2' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன

எனக்கு வலுவான முதுகெலும்பு உள்ளது: அறுவை சிகிச்சைக்குப்பின் சித்தார்த் பதிவு!

நடிகர் சித்தார்த்திற்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக வெளிவந்த தகவல் வெளி வந்த நிலையில் தற்போது அந்த அறுவை சிகிச்சை குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சித்தார்த்

துபாய் தொழிலதிபரை திருமணம் செய்யும் 'கே.ஜி.எஃப்' நடிகை!

யாஷ் நடித்த 'கே.ஜி.எஃப்' என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் துபாய் தொழிலதிபரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன