'ஜெயிலர்' படத்தில் பணிபுரியும் செளந்தர்யா ரஜினியின் தோழி.. நெகிழ்ச்சியான பதிவு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்தில் அவரது மகள் சௌந்தர்யா ரஜினியின் தோழி பணிபுரிவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது என்பதும் இது குறித்து அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்றுமுன் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருந்தபோது எடுத்த போட்டோ ஷூட் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவரை அவரது கணவர் விசாகன் தாங்கிக் கொள்ளும் காட்சி உள்ளது. இந்த நெகிழ்ச்சியான பதிவில் சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறியதாவது:

தாமதமான பதிவு ஆனாலும் மிகவும் மனமார்ந்த பதிவு. எங்களின் சில அழகான தருணங்களை புகைப்படம் எடுத்த அமிர்தா அவர்களுக்கு நன்றி. நாங்கள் இந்த போட்டோஷூட்டை வேடிக்கையாக செய்தோம்.

மேலும் எனது கணவர் விசாகன், எனக்கு மற்றும் வேத் ஆகிய மூவருக்கும் சிறப்பான முறையில் மேக்கப் செய்த எனது எனது தோழி பல்லவிக்கு நன்றி. தற்போது அவர் ‘ஜெயிலர்’ படத்தில் பணியாற்றுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

More News

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 'காட்ஃபாதர்' வெற்றிக்காக மோகன் ராஜா எடுத்த ரிஸ்க்

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில் வெளியாகியிருக்கும் 'காட்ஃபாதர்' படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்திருக்கிறது.

நீ பயப்பட்ற சரி, உன் ஆள் ஏண்டா பயப்பட்றா? 'கோமாளி' இயக்குனரின் 'லவ் டுடே' டிரைலர்

ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' என்ற வெற்றி திரைப்படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் தானே ஹீரோவாக நடித்த திரைப்படம் தான் 'லவ்டுடே'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து

காதலியுடன் திருமணம்.. ஹரிஷ் கல்யாண் வெளியிட்ட அறிக்கை!

நடிகர் ஹரீஷ் கல்யாண் தான் நீண்ட நாட்களாக காதலித்த பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாக நேற்று தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்த நிலையில் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஒன்றை

ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் கிடையாது: கமல்ஹாசன்

ராஜராஜ சோழனை இந்து அரசனாக்க முயற்சி செய்கிறார்கள் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்த நிலையில் அந்த கருத்தை ஒப்புக்கொள்ளும் வகையில் ராஜராஜ சோழன் காலத்தில்

அருண் விஜய்யின் அடுத்த படத்தில் விஜய் பட நாயகி.. மாஸ் டைட்டில் அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அருண்விஜய் நடித்த 'யானை' மற்றும் 'சினம்' ஆகிய படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும், அவர் நடித்த 'பார்டர்'