'எங்கள் வீட்டு சூப்பர் ஸ்டார் ரஜினி இல்லை, இவர் தான்': செளந்தர்யா ரஜினிகாந்த் டுவிட்!

உலகமே சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் என்று கூறிவரும் நிலையில் எங்கள் வீட்டு சூப்பர் ஸ்டார் லதா ரஜினிகாந்த் தான் என செளந்தர்யா ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் திரையுலகில் நுழைந்து 47 வருடங்கள் ஆகிவிட்டன. கடந்த 1975ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கிய ’அபூர்வ ராகங்கள்’ என்ற திரைப்படத்தில் ரஜினி காந்த் அறிமுகம் ஆன நிலையில் அந்த திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 47 வருடங்கள் நிறைவு பெற்றுவிட்டது.

இதனை அடுத்து ரஜினியின் 47 வருட திரையுலக கொண்டாட்டத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று காலை ஏற்கனவே ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் தங்கள் தந்தைக்கு வாழ்த்து கூறிய டுவிட்டுக்களை பார்த்தோம்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் வீட்டில் 47 ஆண்டு திரையுலக வாழ்க்கையை கொண்டாடியதன் புகைப்படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த் இருக்கும் இந்த புகைப்படத்தில் எங்கள் லவ்லி ஜில்லும்மா’, அப்பாவின் மிகப்பெரிய ரசிகை மற்றும் எங்கள் வீட்டு சூப்பர் ஸ்டார் லதா ரஜினிகாந்த்’ என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

More News

ரூ.5 கோடி, ரூ.10 கோடி, ரூ.15 கோடி.... தனுஷின் கடைசி மூன்று படங்களின் சம்பளம் இதுவா?

நடிகர் தனுஷ்தான் நடித்த கடைசி மூன்று திரைப்படங்களுக்கு 5 கோடி ரூபாய், 10 கோடி ரூபாய், 15 கோடி ரூபாய் என சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பிறந்தேன், வாழ்ந்தேன், சாதிக்கிறதுக்குள்ள என்னை கொன்னுட்டாங்க: 'கொலை' டிரைலர்

விஜய் ஆண்டனி நடித்த 'கொலை' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய்யின் 'புலி' பட விவகார வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தளபதி விஜய் நடித்த 'புலி' படத்துக்காக அவர் பெற்ற சம்பளத்தை மறைத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

வனிதா விஜயகுமாரின் 'இரவு பார்ட்டி': காமெடி நடிகருடன் செம ஆட்டம்!

 நடிகை வனிதா விஜயகுமார் நேற்று நடத்திய இரவு பார்ட்டியில் காமெடி நடிகர் ரோபோ சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது 

3 வருடம் காதல், 3 வருடம் திருமண வாழ்க்கை: கணவரை விவாகரத்து செய்த பிக்பாஸ் தமிழ் பிரபலம்!

 பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தனது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.