close
Choose your channels

'துப்பறிவாளன் 2' படத்தில் இருந்து விலகிவிட்டாரா மிஷ்கின்? பரபரப்பு தகவல்

Saturday, February 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய ’துப்பறிவாளன்’ திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. ’துப்பறிவாளன் 2’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்ற நிலையில் விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில் திடீரென அந்த படத்திலிருந்து இயக்குனர் மிஷ்கின் விலகி விட்டதாகவும் அதன்பின்னர் விஷாலை மீதிப்படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்றாலும் விரைவில் விஷால் இந்த படத்தை இயக்கவிருப்பது குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

முதல் பாகத்தில் நடித்த விஷால் மற்றும் பிரசன்னா நடித்து வந்த இந்த படத்தில் மிஷ்கின் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் மிஷ்கின் இந்த படத்தில் இருந்து விலகியுள்ளது உறுதி செய்யப்பட்டால் அவரது கேரக்டரில் வேறு நடிகர் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.