close
Choose your channels

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிகர் சங்க நிர்வாகிகள் திடீர் சந்திப்பு: என்ன காரணம்?

Thursday, June 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் இன்று அவரது இல்லத்தில் சந்தித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் நடிகர் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்ட நாசர், நடிகர் சங்க பொருளாளராக தேர்வு செய்யப்பட்ட கார்த்தி மற்றும் நடிகர் சங்க நிர்வாக குழு உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட பூச்சி முருகன் ஆகியோர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சந்திப்பின்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயர் மாற்ற திட்டமிட்டிருப்பதாகவும் இதுகுறித்து ரஜினியுடன் நடிகர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணி தற்போது பாதியில் இருப்பதால் அதை முடிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்தும் ரஜினியுடன் நடிகர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.