ஈரான் இயக்குனரின் படத்தில் தென்னிந்திய நடிகை

  • IndiaGlitz, [Monday,April 10 2017]

உலகப்புகழ் பெற்ற ஈரான் இயக்குனர் மஜித்மஜிதி குறித்து சினிமா ரசிகர்கள் தெரிந்திராமல் இருந்திருக்க முடியாது. இவர் தற்போது 'Beyond The Clouds' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிக்க பழம்பெரும் தென்னிந்திய நடிகை ஜி.வி.ஷாரதா ஒப்பந்தமாகியுள்ளார்.

அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக கொண்டு உருவாக்கப்படும் இந்த படத்தை ஜீஸ்டூடியோஸ் (Zee Studios) மற்றும் ஐகேண்டிஃபிலிம்ஸ் (Eyecandy Films) நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. சுமார் 60 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பழம்பெரும் நடிகை ஷாரதா நீண்ட இடைவெளிக்கு பின்னர் அதுவும் உலகப்புகழ் பெற்ற இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கவுள்ளதால் இந்த படம் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. இந்த படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு குறித்து ஷாரதா கூறியதாவது:

15 ஆண்டுகள் இடைவேளைக்குப் பிறகு மீண்டும் திரைப்படத்தில் நடிப்பது மகிழ்ச்சியை அளிப்பதாகவும், அதுவும், தான் “திரையுலக கடவுள்” போன்று கருதும் மஜித்மஜிதி படத்திலேயே நடிப்பது மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பன்முகதிறமை கொண்ட மஜித்மஜிதியின் தேர்ந்த படக்குழுவினருடனும், தயாரிப்பு நிறுவனங்களான ஜீஸ்டூடியோஸ்மற்றும் ஐகேண்டிஃபிலிம்ஸ் இணைந்து பணியாற்ற இருப்பது மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இப்படத்திற்காக நடிகை சாரதா அவர்களை உடல் எடையை குறைக்குமாறு இயக்குனர் மஜித்மஜிதி அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளதாகவும், அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் தயாரிப்பு நிறுவன தகவல் தொடர்பாளர்கள் தெரிவித்தனர்

More News

இனிமேல் படங்கள் இயக்க வேண்டாம். தனுஷுக்கு ரஜினி அட்வைஸ்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு படத்தை பார்த்துவிட்டு அந்த படம் குறித்து பாசிட்டிவ் ஆக ஒரே ஒரு குரல் கொடுத்தால் அந்த வாய்ஸ்க்கு இருக்கும் மதிப்பே தனி. சமீபத்தில் கூட இளையதலைமுறை இயக்குனர்களின் படங்களுக்கு ரஜினி வாய்ஸ் கொடுக்க, அந்த படங்கள் சூப்பர் ஹிட் ஆகியது என்பது தெரிந்ததே.

வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தின் நாயகன் - நாயகி இவர்கள்தான்!!

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான 'சென்னை 28' படத்தின் இரண்டாம் பாகம் வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் தனது அடுத்த படத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

ரூ.24 லட்சம் சம்பாதித்த எஞ்சினியர், விவசாயியாக மாறி ரூ.2 கோடி சம்பாதித்த அதிசயம்

படித்தவர்களாக இருந்தாலும் பாமரராக இருந்தாலும் தனது மகன் ஒரு எஞ்சினியர், டாக்டர் ஆக வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் கனவு காண்பது இந்தியாவில் வழக்கமாக உள்ளது. இதேபோன்ற ஒரு சராசரி பெற்றோருக்கு பிறந்த சச்சின் என்பவர் பெற்றோர்களின் விருப்பப்படி எஞ்சினியர் ஆகி ரூ.24 லட்சம் சம்பாதித்த நிலையில் திடீரென மனம் மாறி விவசாயியாக மாற

திரைவிமர்சனம் குறித்து ரஜினி கூறிய குட்டிக்கதை

இன்று நடைபெற்ற 'நெருப்புடா' பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஷால், 'திரைவிமர்சனம் செய்பவர்கள் முதல் மூன்று நாட்களை விட்டுவிட்டு நான்காவது நாள் விமர்சனம் செய்யும்படி கேட்டுக்கொண்டார்...

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து குறித்து விஷால் கூறியது என்ன?

நாளை மறுநாள் நடைபெறுவதாக இருந்த சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நேற்றிரவு தேர்தல் ஆணையம் அதிரடியாக ரத்து செய்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி பதிவு செய்யப்பட்டு வருகிறது...