தயாரிப்பாளர் சங்கத்துடன் மோதலா? நடிகர் சங்கத்தின் முக்கிய அறிக்கை..!

  • IndiaGlitz, [Monday,July 03 2023]

தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கங்களுக்கு இடையே மோதல் என செய்திகள் வெளியான நிலையில் நடிகர் சங்கம் விளக்கம் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“தென்னிந்திய நடிகர்‌ சங்கத்திற்கும்‌, தமிழ்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கத்திற்கும்‌ இடையே நீண்டகாலமாக நல்லுறவு நிலவி வருகிறது. நடிகர்கள்‌ நலனை, உரிமைகளை பாதுகாப்பது போலவே தயாரிப்பாளர்கள்‌ நலனை கருத்தில்‌ கொண்டே தென்னிந்திய நடிகர்‌ சங்கம்‌ செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக இரு சங்கங்கள்‌ இடையே மோதல்‌ என்ற ரீதியில்‌ ஊடகங்கள்‌ மற்றும்‌ பத்திரிகைகள்‌ மூலமாக செய்திகள்‌ பரப்பப்படுகின்றன

தமிழ்‌ திரைத்துறையின்‌ முக்கிய சங்கங்களான தென்னிந்திய நடிகர்‌ சங்கம்‌ மற்றும்‌ தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கங்களுக்குள்‌ இடையே எந்த மோதலும்‌ இல்லை. நடிகர்களின்‌ கால்வீட்‌, புதிய ஒப்பந்தங்கள்‌ குறித்து தயாரிப்பாளர்கள்‌ தரப்பில்‌ இருந்து சில புகார்கள்‌ வந்தன. அதேபோல்‌ நடிகர்கள்‌ தரப்பிலும்‌ சில பிரச்சினைகளை கூறியுள்ளனர்‌. இவை வழக்கமாக இரு தரப்பிலும்‌ எழக்‌கூடிய, பேசினால்‌ தீர்ந்து விடக்‌ கூடிய பிரச்சினைகள்தான்‌.

ஆனால்‌ ஒரு தரப்பு வாதங்களை மட்டுமே மையமாக வைத்து செய்திகள்‌ பரவுவது வருத்தம்‌ அளிக்கிறது. இரு தரப்பிலும்‌ பேச்சுவார்த்தை மிக சுமூகமாக நடைபெற்று வருகிறது. அனைத்து பிரச்சினைகளும்‌ விரைவில்‌ களையப்படும்‌. இதை விடுத்து இரு சங்கங்களிடையேயான நல்லுறவை சீர்குலைக்கும்‌ விதத்தில்‌ வீண்‌ வதந்திகளை பரப்புவோருக்கு எங்கள்‌ கண்டனத்தை பதிவு செய்கிறோம்‌.

More News

10,000 பெண்களுடன் உடலுறவா? சொந்த குரலால் வசமாக சிக்கிய நட்சத்திர கால்பந்து வீரர்?

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரபல நட்சத்திர வீரர் ஒருவரின் வழக்கு தற்போது இங்கிலாந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் நான் 10,000 பெண்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டேன்

அனுஷ்கா ஷெட்டியின் 'மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் 'பொலிஷெட்டி' ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா  ஷெட்டி நடித்த அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபாஸின் 'சலார்' படத்தின் மாஸ் அப்டேட்.. ரசிகர்கள் உற்சாகம்..!

சமீபத்தில் பிரபாஸ் நடித்த 'ஆதிபுருஷ்' என்ற திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்ற நிலையில் அவர் நடித்து வரும் 'சலார்' என்ற திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேண்டுமென்றே உடலுறவை தவிர்த்த மனைவி? அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!

திருமண வாழ்வில் வேண்டுமென்றே உடலுறவை தவிர்ப்பது மனக்கொடுமைக்கு சமம் என்று கூறி டெல்லி குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டு இருப்பது பேசுபொருளாகி இருக்கிறது

சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த திமுக அமைச்சர்: என்ன காரணம்..?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை திமுக அமைச்சர் சந்தித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.