'இந்தியன் 2' படத்தில் பிரபல தென்கொரிய நடிகை

  • IndiaGlitz, [Saturday,January 05 2019]

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, துல்கர் சல்மான், காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்கவிருப்பதாக கூறபடுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல தென்கொரிய நடிகையும் பாடகியுமான Suzy Bae என்பவர் நடிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் தைவானில் படமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. லைகா தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகும் இந்த படம் 2020ஆம் ஆண்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு 2' ரிலீஸ் குறித்த தகவல்

கோலிவுட் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக இருந்த சந்தானம் ஹீரோவாக புரமோஷன் பெற்று ஒருசில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

ரஜினிகாந்த்-முருகதாஸ் படத்தின் படப்பிடிப்பு எப்போது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் வரும் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படம் வசூலில் பல சாதனைகளை முறியடிக்கும் என கருதப்படுகிறது.

அமெரிக்க தியேட்டரில் ஜாலியாக படம் பார்த்த கேப்டன்

கேப்டன் விஜயகாந்த் சிகிச்சைக்காக கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்கா சென்றார் என்ற செய்தி தெரிந்ததே. அவருடன் அவருடைய மனைவி பிரேமலதா, மகன் சண்முகபாண்டியன் ஆகியோர்களும் சென்றுள்ளனர்.

பிரபல தயாரிப்பாளர் மீது பாலியல் வழக்கு: நடிகையின் புகாரால் பரபரப்பு

பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளர் மீது, நடிகை ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

'விஸ்வாசம்' படம் பார்த்த ஷாலினி அஜித்! வைரல் புகைப்படம்

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் வெளியாக இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே இருப்பதால் அஜித் ரசிகர்கள் கடந்த சில நாட்களாக 'விஸ்வாசம்' திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.