close
Choose your channels

பாடகர் எஸ்பி. பாலசுப்பிரமணியனுக்கு கொரோனா: திரையுலகினர் அதிர்ச்சி

Wednesday, August 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதையும் அதே நேரத்தில் கொரோனா வைரஸில் இருந்து குணமாகி வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் சிலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற செய்தியையும் பார்த்து வருகிறோம். 

இந்த நிலையில் தற்போது அனைவருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதனை அடுத்து அவர் சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு கொரோனா என்ற தகவலை அடுத்து திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவர் விரைவில் குணமாக வேண்டுமென்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.