தனுஷை நேசிக்கும் ஸ்பெயின் ரசிகர்கள்: இயக்குனர் பாராட்டு

  • IndiaGlitz, [Thursday,May 16 2019]

தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படமான 'The Extraordinary Journey Of The Fakir' என்ற திரைப்படம் இன்னும் இந்தியாவில் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும் பிரான்ஸ், ரஷ்யா, இத்தாலி, நெதர்லாந்து உள்பட உலகின் பல நாடுகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்த படம் சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் ரிலீஸ் செய்யப்பட்டது. எதிர்பார்த்ததைவிட இந்த படத்திற்கு ஸ்பெயின் ரசிகர்கள் நல்ல வரவேற்பை அளித்துள்ளனர். இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்த நிலையில் ஸ்பெயினில் இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை அறிந்ததும் இந்த படத்தின் இயக்குனர் கென் ஸ்காட் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ''The Extraordinary Journey Of The Fakir' திரைப்படம் ஸ்பெயினில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும், ஸ்பெயினில் உள்ளவர்கள் தனுஷை மிகவும் நேசிப்பதாகவும்  குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் கென் ஸ்காட்டின் இந்த டுவீட்டை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ரீடுவீட்  செய்து  நன்றியும் தெரிவித்துள்ளார்.

இந்த படம் ஏற்கனவே நார்வே சர்வதேச திரைப்பட விழாவிலும், பார்சிலோனா சர்வதேச திரைப்பட விழாவிலும் விருது பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

படுக்கையை பகிர்ந்தால் தான் பாட வாய்ப்பு: இயக்குனர் மீது பாடகி பாலியல் புகார்!

பாட வாய்ப்பு வேண்டும் என்றால் படுக்கையை பகிர வேண்டும் என்று முன்னணி இயக்குனர் ஒருவர் நிர்ப்பந்தம் செய்ததாக பிரபல பாடகி ஒருவர் திடுக்கிடும் புகார் ஒன்றை கூறியுள்ளார்.

விஷாலை மட்டும் தேர்தலில் எதிர்ப்போம்: பிரபல தயாரிப்பாளர்-நடிகர்!

நடிகர் சங்க தேர்தல் விரைவில் வரவுள்ளதாகவும் ஓய்வு பெற்ற நீதிபதியின் கண்காணிப்பில் தேர்தல் நடைபெறும் என்றும், இப்போதுள்ள நிர்வாகிகளே அந்தந்த பதவிக்கு மீண்டும் போட்டியிடுவார்கள்

இந்து தீவிரவாதம் பேச்சு: முன் ஜாமீன் மனுதாக்கல் செய்த கமல்

கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்து தீவிரவாதம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் நேற்று அவர் மீது அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

இந்து தீவிரவாதி என நான் பேசியது சரித்திர உண்மை: கமல்ஹாசன்

சமீபத்தில் அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்த கமல்ஹாசன், 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்ததோடு,

கமல்ஹாசனை வெளியே நடமாட விடமாட்டோம்: மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை 

தொடர்ச்சியாக இந்து விரோத பேச்சை கடைபிடித்து வரும் கமல்ஹாசனை வெளியே நடமாட விடமாட்டோம் என மன்னார்குடி ஜீயர் கமல்ஹாசனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.