close
Choose your channels

கார்த்தியின் 'தேவ்' படத்தில் இணைந்த 'ஏழாம் அறிவு' கூட்டணி

Wednesday, October 31, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பழம்பெரும் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் இளம் இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் முதல்முறையாக சூர்யாவின் ஏழாம் அறிவு' படத்திற்காக ஒரு பாடலை பாடினார். கபிலன் வைரமுத்து எழுதிய 'எம்மா எம்மா' என்ற அந்த பாடல் சூப்பர் ஹிட் ஆனது.

இந்த நிலையில் ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் கபிலன் வைரமுத்து பாடல் வரிகளில் மீண்டும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், 'தேவ்' படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் இன்று ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இந்த பாடல் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் வேல்ராஜ் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் கார்த்தி, ரகுல் ப்ரித்திசிங், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், மற்றும் நவரச நாயகன் கார்த்திக் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.