என் கடைசி பாடலையும் எஸ்பிபி தான் பாட வேண்டும்: வைரமுத்து உருக்கம்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் விரைவில் குணமாகி வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்யாதவர்களே இல்லை என்று கூறலாம். கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை தனது குரலால் கொள்ளை கொண்ட எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் மீண்டும் உடல்நிலை தேறி பாட வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் எஸ்பிபி அவர்களின் மிகவும் நெருக்கமான நண்பர்களில் ஒருவரான கவியரசு வைரமுத்து அவர்கள் ஏற்கனவே எஸ்பிபி அவர்கள் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் எஸ்பிபி குறித்து வைரமுத்து கூறியபோது, ‘40 ஆண்டுகளாக மாறாத மகா கலைஞர் எஸ்பிபி என்றும் தனது முதல் பாடலை பாடியவர் எஸ்பி பாலசுப்ரமணியம் தான் என்றும், எனது கடைசி பாடலையும் அவர்தான் பாட வேண்டும் என்று வைரமுத்து குறிப்பிட்டு உள்ளார். மேலும் இந்த உலகிற்கு இன்பம் மட்டுமே கொடுத்தவர் எஸ்பிபி என்றும் வைரமுத்து அவருக்கு புகழாராம் சூட்டியுள்ளார்.
வைரமுத்து எழுதிய முதல் பாடலான ‘பொன்மாலை பொழுது’ என்ற பாடலை எஸ்பிபி தான் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.