விவேக் குற்றச்சாட்டுக்கு ஒரு மணி நேரத்தில் பதிலளித்த விமான நிறுவனம்

  • IndiaGlitz, [Monday,February 19 2018]

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் தனது படங்களில் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் சமுதாய சிந்தனைகளை தெரிவித்து வருபவர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இன்று அவர் ஒரு முக்கிய குற்றச்சாட்டை பிரபல விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் மீது வைத்துள்ளார்.

ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் உள்ளே இந்தி, மராத்தி, குஜராத்தி மற்றும் ஆங்கிலத்தில் அறிவிப்புகள் ஒலிக்கப்படுவதாகவும், தமிழகத்திற்கு வரும் விமானத்தில் கூட தமிழில் அறிவிப்பு ஒலிக்கப்படுவதில்லை என்றும் தனது சமூக வலைத்தளத்தில் நடிகர் விவேக் புகார் கூறியிருந்தார். எனவே தமிழ் மட்டுமே தெரிந்த மக்களுக்கும் புரியும் வகையில் தமிழகத்திற்கு வரும் விமானங்களில் தமிழிலும் அறிவிப்பு ஒலிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைத்தார்.

விவேக்கின் கோரிக்கைக்கு உடனடியாக பதிலளித்த ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம், 'தங்களுடைய மேலான கருத்துக்களுக்கு நன்றி. உங்கள் கோரிக்கையை எங்கள் குழுவினர்களுடன் இணைந்து பரிசீலனை செய்யவுள்ளோம். உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சிப்போம் என்று கூறியுள்ளது. தனது கோரிக்கைக்கு உடனடியாக பதிலளித்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு விவேக் நன்றி தெரிவித்துள்ளார்.

More News

நெருங்கிய நண்பருக்காக சிவகார்த்திகேயன் செய்த அரிய செயல்

சிவகார்த்திகேயன் குறுகிய காலத்தில் கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இணைந்தாலும், கஷ்டப்பட்டபோது உடனிருந்த நண்பர்களை மறக்காமல் அவர்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

'நாச்சியார்' படத்தின் மூன்று நாள் அசர வைக்கும் வசூல் விபரம்

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ், நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான 'நாச்சியார்' திரைப்படம் நல்ல ஓப்பனிங் வசூலை பெற்றது

முதன்முதலாக தனுஷ்-சசிகுமார் இணையும் படம் எது தெரியுமா?

கோலிவுட் திரையுலகில் இரண்டு முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கும் திரைப்படங்கள் அபூர்வமாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது தனுஷ் மற்றும் சசிகுமார் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

என்னை பற்றி பரவும் வதந்திகளில் உண்மை இல்லை: ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ரசிகர்களின் பேராதரவை பெற்று பெரும்புகழ் பெற்ற ஓவியாவுக்கு கோலிவுட் திரையுலகிலும் நல்ல வாய்ப்புகள் கிடைத்தது.

சிறுமி ஹாசினி கொலை வழக்கு: தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை

சென்னையை அடுத்த குன்றத்தூர் பகுதியிலுள்ள போரூர் பகுதியை சேர்ந்த சிறுமி ஹாசினி கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.