close
Choose your channels

'தளபதி 67' படக்குழுவினர்களுக்காக தனி விமானம், தனி கவுண்டர்.. வைரல் புகைப்படம்!

Tuesday, January 31, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் 67வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளிவந்தது என்பதும் இந்த படத்தில் பணி புரியும் தொழில்நுட்ப கலைஞர்களின் அறிவிப்பு வெளியானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் ’தளபதி 67’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற இருப்பதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இன்று சென்னையில் இருந்து காஷ்மீருக்கு ’தளபதி 67’ பட குழுவினர்களுக்காக தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இந்த விமானத்தில் விஜய் உள்பட படக்குழுவினர் காஷ்மீர் செல்வதாகவும் விமான நிலையத்தில் ’தளபதி 67’ பட குழுவினர்களுக்காக தனி கவுண்டரும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் புகைப்படங்களில் இருந்து தெரிய வருகிறது.

‘தளபதி 67’ படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பில் விஜய், சஞ்சய்தத் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள இருப்பதாகவும் காஷ்மீரில் அதிரடி ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.