close
Choose your channels

'ஸ்பைடர்மேன்' முதல் நாள் இந்திய வசூல் இத்தனை கோடியா?

Friday, December 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஸ்பைடர்மேன்’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்தின் முதல் நாள் இந்திய வசூல் இந்திய திரையுலகினருக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

’புஷ்பா’ என்ற பெரிய பட்ஜெட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் நேற்று ‘ஸ்பைடர்மேன்’ திரைப்படம் வெளியானது. மற்ற பாகங்களில் ஒரு ஸ்பைடர்மேன் மட்டுமே இருந்த நிலையில் இந்த பாகத்தில் மூன்று ஸ்பைடர்மேன்கள் இருந்ததால் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்பதும் இதனை அடுத்து இந்த படத்தை பார்க்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திரையரங்குகளை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியாவில் முதல் நாளில் ‘ஸ்பைடர்மேன்’ படம் 32.67 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வசூல் ஏற்கனவே வசூல் செய்த பல படங்களின் சாதனைகளை முறியடித்து உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஹாலிவுட் திரைப்படமான ’அவென்சர்ஸ் இன்ஃபினிட்டி’ இந்தியாவில் முதல் நாளில் ரூ.31.30 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வசூலையும் ‘ஸ்பைடர்மேன்’ முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள ’புஷ்பா’ திரைப்படம் ‘ஸ்பைடர்மேன்’ சாதனையை முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.