ஸ்பைடர்மேன் டிரைலர் ரிலீஸ்: ரிலீஸ் தேதியும் அதிகாரபூர்வமாக அறிவிப்பு!


Send us your feedback to audioarticles@vaarta.com


மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி வந்த ’ஸ்பைடர்மேன் நோ வே ஹோம்’ என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த டிரைலர் தற்போது வைரலாகி வருகிறது.
ஹாலிவுட்டில் வெளிவரும் ஸ்பைடர் மேனின் அத்தனை படங்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மார்வெல் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்த ’ஸ்பைடர்மேன் ஹோம் கமிங்’ மற்றும் ’ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்த நிலையில் ’ஸ்பைடர்மேன் நோ வே ஹோம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் இதனையடுத்து இந்த படம் வரும் டிசம்பர் 17ஆம் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த டிரைலர் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்பைடர் மேன் மற்றும் வில்லன்கள் மோதும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், ஆச்சரியமான கிராபிக்ஸ் காட்சிகள் என ஹாலிவுட்டுக்கு உரிய பிரமாண்டத்தை இந்த படம் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் உள்பட அனைத்து இந்திய மொழிகளிலும் இந்த படம் கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments