'ஸ்பைடர்' தமிழ் பதிப்பின் சென்சார் தகவல்கள்

  • IndiaGlitz, [Tuesday,September 19 2017]

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'ஸ்பைடர்' படத்தின் தெலுங்கு பதிப்பின் சென்சார் நேற்று நடைபெற்று 'யூஏ' சான்றிதழ் பெற்றது. இந்த நிலையில் இன்று இந்த படத்தின் தமிழ் பதிப்பின் சென்சாரும் முடிவடைந்துள்ளது.

'ஸ்பைடர்' படத்தின் தமிழ் பதிப்பிற்கு தெலுங்கு பதிப்பை போலவே சென்சார் அதிகாரிகள் 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் மது அருந்தும் காட்சிகள், புகைப்பிடிக்கும் காட்சிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் ஆகும். செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால் தமிழின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையான ஓப்பனிங் வசூல் இந்த படத்திற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

அனிதா குடும்பத்திற்கு ஆறுதல் கூறுகிறார் தீபா

நீட் தேர்வு காரணமாக 1176 மதிப்பெண்கள் எடுத்தும் மெடிக்கல் சீட் கிடைக்காத மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மறைவு தமிழத்தையே அதிர்ச்சி அடைய செய்தது.

மூன்று வருடங்களுக்கு மீண்டும் மோதும் விஜய்-விஷால் படங்கள்

கடந்த 2014ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் விஜய் நடித்த 'கத்தி' மற்றும் விஷால் நடித்த 'பூஜை' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆன நிலையில் இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் இருவரது படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறது.

தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி: மூத்த பாஜக தலைவர் கருத்து

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே அரசியல் நிலையற்ற தன்மை இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்னும் 2 வாரத்தில் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி வர வாய்ப்பு இருப்பதாக சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்

மகேஷ்பாபுவுடன் விஜய், விஜய்யுடன் விக்ரம்: புதுமையான கூட்டணி

இன்றைய கோலிவுட் திரையுலகினர் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருக்கின்றனர் என்பது பல நிகழ்ச்சியில் இருந்து தெரியவந்துள்ளது.

பெண் எம்.எல்.ஏவிடம் பாராட்டு பெற்ற 'மகளிர் மட்டும்'

கடந்த வாரம் வெளிவந்த ஜோதிகாவின் 'மகளிர் மட்டும்' திரைப்படம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் பாராட்டை பெற்றது மட்டுமின்றி பல விஐபிக்கள் இந்த படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்