மலேசியாவில் இந்து கடவுள் அனுமனுக்கு பிரமாண்டமான கோவில்.. அழகிய புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Wednesday,June 07 2023]

இந்து கடவுளான அனுமனுக்கு தமிழ்நாடு உள்பட இந்தியாவில் பல இடங்களில் கோவில் இருக்கும் நிலையில் தற்போது மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் அனுமன் கோயில் கட்டப்பட்டுள்ளது அந்நாட்டு பக்தர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1920 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் உள்ள பிரிக்பீல்ட் என்ற பகுதியில் குடியேறிய இந்திய வம்சாவளியினர் இந்த கோவிலை கட்டியுள்ளனர். மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் பிரிக்பீல்ட் என்ற முக்கிய இடத்தில் அமைந்துள்ள இந்த கோயில் இந்திய வழிபாட்டு தலங்களின் அம்சமாக காணப்படுகிறது.

அதுமட்டுமின்றி ஒரு பிரபலமான சுற்றுலா தளமாகவும் மற்ற நாடுகளில் இருந்து வரும் இந்துக்கள் பார்க்க வேண்டிய ஒரு கோவில் ஆகவும் உள்ளது. இரண்டு தளங்கள் கொண்ட இந்த கோவிலில் கீழ் தளத்தில் அனுமனுக்கு பிரதான சன்னதி உள்ளது. அனுமன் மட்டுமின்றி இந்து தெய்வங்களின் சிலைகள் இந்த கோவிலில் அலங்கரிக்கப்பட்டுள்ளது என்பதும் நூலகம், மண்டபம், தியான அறை ஆகியவையும் உள்ளது.

தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்களுக்காக இந்த கோவில் திறந்திருக்கும் என்றும் பார்வையாளர்கள் வந்து பிரார்த்தனையை செய்து மன நிம்மதி அடையலாம் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கோயிலின் கட்டடக்கலை அனைவரும் கவரும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு அழகான அமைதியான வழிபாட்டுத் தலமாக கோலாலம்பூரில் அமைக்கப்பட்டுள்ள அனுமன் கோவிலில் வழிபாடு செய்தால் மன நிம்மதி கிடைப்பது உறுதி..