தனுஷூக்கு இளைய சூப்பர்ஸ்டார் பட்டம் கொடுத்த பிரபல தயாரிப்பு நிறுவனம்!

  • IndiaGlitz, [Wednesday,July 28 2021]

நடிகர் தனுஷ் இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று இளைய சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினிகாந்துக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் கொடுத்த நிலையில் தற்போது இளைய சூப்பர் ஸ்டார் பட்டம் தனுசுக்கு பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் என்ற நிறுவனம் கொடுத்துள்ளது.

இன்று தனுஷ் தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் இளைய சூப்பர் ஸ்டார் தனுஷ் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நிறுவனம்தான் தனுஷ்-சேகர் கம்முலா இணையும் திரைப்படத்தை தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனுஷ் - சேகர் கம்முலா படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தனது டுவிட்டில் குறிப்பிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மீண்டும் 'பீஸ்ட்' படப்பிடிப்பில் கலந்து கொள்வது எப்போது? பூஜா ஹெக்டே பேட்டி!

தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்ற நிலையில் தற்போது சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று

தனுஷ் பர்த்டே ஸ்பெஷல்.....! அவர் குறித்த ஆச்சரியமான விஷயங்கள் என்னென்ன...?

நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் மற்றும் இயக்குனர் என்று பன்முகம் கொண்ட கலைஞராக, தமிழ் சினிமாவில் வலம் வரும் தனுஷ் இன்று தன்னுடைய 38-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அபராதத் தொகையை நிவாரணமாக வழங்க விருப்பமில்லை: விஜய் தரப்பு பதில்

சொகுசு கார் வழக்கில் விதிக்கப்பட்ட அபராதத் தொகையை நிவாரண நிதியாக வழங்க விருப்பமில்லை என விஜய் தரப்பு தனி நீதிபதி முன்பு கூறியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது 

கிணறு தோண்டிய பள்ளத்தில் ரத்தினக்கல்? ஒரே நாளில் ரூ.700 கோடிக்கு அதிபதியான சம்பவம்!

இலங்கையில் வணிகர் ஒருவர் தன்னுடைய வீட்டின் பின்புறம் உள்ள நிலத்தில் தற்செயலாக கிணறு தோண்டி இருக்கிறார்.

திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் அதிமுக… என்ன காரணம்?

சட்டமன்றத் தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள்