சரோஜா தேவி பாடலுக்கு டான்ஸ் ஆடிய ஸ்ரீலீலா.. சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ.. இன்று என்ன ஸ்பெஷல்?


Send us your feedback to audioarticles@vaarta.com


பிரபல நடிகை ஸ்ரீலீலா, ஒரு சிறு குழந்தையை போல நடனமாடும் வீடியோவை இயக்குனர் சுதா கொங்கரா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில், அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஸ்ரீலீலா, தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்தார். தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் 'பராசக்தி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் ஸ்ரீலீலாவுக்கு, திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் சுதா கொங்கரா ஒரு வீடியோவை வெளியிட்டு, ஸ்ரீலீலாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில், சிவாஜி கணேசன், சரோஜாதேவி நடித்த 'பார்த்தால் பசி தீரும்' என்ற படத்தில் இடம்பெற்ற 'கொடி அசைந்ததும் காற்று வந்ததா' என்ற பாடலின் பின்னணியில் ஸ்ரீலீலா நடனமாடியுள்ளார். இந்த பாடலுக்கு ஸ்ரீலீலா குழந்தைத்தனமாக நடனமாடும் காட்சி க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஸ்ரீலீலா தற்போது மூன்று தெலுங்கு படங்களிலும், ஒரு ஹிந்தி படத்திலும் நடித்து வரும் நிலையில், இந்த ஆண்டு அவரது 5 படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Happy birthday @sreeleela14 !!!! May that inner child keep dancing always and forever ❤️🤗 pic.twitter.com/sQeNzcJHp3
— Sudha Kongara (@Sudha_Kongara) June 14, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com