அசத்தலான யார்க்கர்கள்: தமிழக பந்துவீச்சாளர் நடராஜனுக்கு குவியும் வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Wednesday,September 30 2020]

நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 2 தோல்வி அடைந்திருந்த ஹைதராபாத்துக்கு நேற்றைய வெற்றி பெரும் ஆறுதலாக இருந்தது மட்டுமன்றி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த ஐதராபாத் அணி ஆறாவது இடத்திற்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த போட்டியில் ஐதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினார்கள் என்றாலும் டெல்லி அணியை இலக்கை அடைய முடியாமல் கட்டுப்படுத்திய ஹைதராபாத் பந்துவீச்சாளர்களும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது

குறிப்பாக தமிழக வீரர் நடராஜன், புவனேஷ் குமார் மற்றும் ரஷித்கான் ஆகிய மூவரின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. ஐபிஎல் போட்டியை பொறுத்தவரை 18 முதல் 20 வரையிலான மூன்று ஓவர்கள் மிக முக்கியமானதாக இருக்கும். அந்த வகையில் 18-வது ஓவரை வீசிய நடராஜன் 5 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து ஆறாவது பந்தில் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார் என்பதும், அதுவும் அதிரடியாக மன்னன் ஸ்டோனிஸ் விக்கெட்டை வீழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியில் நடராஜன் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி உள்ளார்

நடராஜனின் பந்துவீச்சை பிரட்லீ, வீரேந்திர சேவாக் உள்ளிட்ட பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக அவரது யாக்கர் பந்துகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

தமிழகத்தின் சேலம் பகுதியை சேர்ந்த நடராஜன், ஹைதராபாத் அணிக்காக கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார் என்பதும், அதற்கு முன்னர் பஞ்சாப் அணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி தமிழக கிரிக்கெட் அணியிலும், லைகா கோவை கிங்ஸ் அணியிலும் இவர் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்ச்சியாக ஐபிஎல் மற்றும் தமிழக அணியில் நன்றாக விளையாடினால் விரைவில் நடராஜனுக்கு இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 

More News

கொரானாவால் பாதிக்கப்பட்டும் பாட்டு பாடி உற்சாகமாக இருக்கும் 'விஸ்வாசம்' புகழ் பாடகர்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை என்ற பகுதியைச் சேர்ந்த திருமூர்த்தி என்றா மாற்றுத்திறனாளி பாடகர் 'விஸ்வாசம்' படத்தில் இடம்பெற்ற 'கண்ணான கண்ணே' என்ற பாடலை தத்ரூபமாக

அனைவரும் விடுதலை: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு!

கடந்த 1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 28 ஆண்டுகாலமாக நடைபெற்ற இந்த வழக்கின் தீர்ப்பு சற்று முன்னர் வழங்கப்படும்

தொட்டாலே ஷாக்… வானத்தில் இருந்து பயங்கர சத்தத்துடன் விழுந்த கல்லால் பரபரப்பு!!!

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அடுத்த தீர்த்தாண்டதானம் எனும் இடத்தில் நேற்றுமுன் தினம் பயங்கர சத்தத்துடன் ஒரு கல் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

ஏழைகளின் நாயகன் நடிகர் சோனு சூட்டுக்கு சிறப்பு விருது வழங்க இருக்கும் ஐ.நா.!!!

இந்தியாவில் கொரோனா ஊரடங்கால் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்த பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டியவர்

சாவுல கூட நியாயம் இல்ல.. கவின் ஆவேச டுவீட்

உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து டுவிட் செய்த நடிகர் கவின், 'சாவில் கூட நியாயம் இல்லை' என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது